”உனக்கு எமன் நானே” கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை மிரட்டல் விடுப்பதாக கணவர் புகார்!

திருமணமாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையில், கள்ளக்காதலன் சங்கர்லாலோடு சேர்ந்து கொண்டு கணவர் அருள்மணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் கலையரசி. கணவரின் புகாரின் பேரில் கள்ளக்காதலன் சங்கர்லால் கைதாகியுள்ளார். 

Web Desk | news18
Updated: July 6, 2019, 8:34 AM IST
”உனக்கு எமன் நானே” கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை மிரட்டல் விடுப்பதாக கணவர் புகார்!
பாதிக்கப்பட்ட கணவர் அருள்மொழி
Web Desk | news18
Updated: July 6, 2019, 8:34 AM IST
நான்தான் உனக்கு எமன் என்று கள்ளக் காதலனோடு சேர்ந்து கொண்டு கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மனைவி. இந்த வழக்கில் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்மணி. இவருக்கும் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த கலையரசி என்பவருக்கும் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் ஆனது. திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் அருள்மணிதான் செய்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் அருள்மணி வேலைக்கு சென்ற பிறகு, கலையரசி யாரோ ஒரு நபருடன் பலமணிநேரம் போனில் பேசிக் கொண்டு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அருள்மணி விசாரித்தபோதுதான் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சங்கர்லாலோடு அவருக்கு கள்ளத் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. .

சங்கர்லாலோடு மனைவிக்குத் தவறான உறவு ஏற்பட்டதால் பிரிந்த அருள்மணி, நாமக்கல் குடும்ப நலநீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், சங்கர்லாலும், கலையரசியும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அருள்மணி குற்றம்சாட்டியுள்ளார் . உனக்கு நான் தான் எமன் என்று சங்கர்லால் மிரட்டியுள்ளார்.

கொலை மிரட்டலின் உச்சக்கட்டமாக, உன்னை எப்படி கொலை செய்யப் போகிறேன் தெரியுமா என்று கூறி கொலை செய்யும் சில மாடல் படங்களை, அருள்மணியின் வாட்ஸப்பிற்கு அனுப்பியுள்ளார் சங்கர்லால்.

சங்கர்லாலின் மனைவி தீபா, கடந்த 40 நாட்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது இறப்பில் இருவருக்கும் தொடர்பிருக்கலாம் என அருள்மணி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ராசிபுரம் காவல் நிலையம்


சங்கர்லாலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரிடம் இருந்து பிரிந்து வாழ முயற்சி செய்வதாக தீபா, அருள்மணியிடம் தெரிவித்துள்ளார். அருள்மணியின் புகாரையடுத்து சங்கர்லால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணத்திற்கு முன்பிருந்தே அருள்மணியின் மனைவிக்கும் சங்கர்லாலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க... திருத்தணி அருகே டிக்டாக் செயலியியால் நடந்த கொலை

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...