தம்பி முறை உடையவருடன் கள்ளக்காதல்... 4 குழந்தைகளை விட்டு சென்ற மனைவி... கணவர் தற்கொலை முயற்சி

  • Share this:
விழுப்புரத்தில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலருடன் மனைவி இரண்டாவது முறையாக சென்றதால் அவமானத்தில் கணவர் மற்றும் மாமியார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான கருணாகரன். அவரது மனைவி 25 வயதான வைத்தீஸ்வரி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது இருக்கும்போது வைத்தீஸ்வரியை காதலித்து கருணாகரன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் சென்னை, மதுரவாயல் ஏரிக்கரையில் வாடகை வீட்டில் குடியேறினர். கருணாகரன் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 6 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், கருணாகரனின் சொந்த கிராமமான சோ.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ஏழுமலை, சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுநராக பணிக்கு சேர்ந்துள்ளார்.


கருணாகரனின் மைத்துனரும் வைத்தீஸ்வரிக்கு தம்பி முறையும் உடைய ஏழுமலை சென்னையில் தங்க வீடு இல்லாமல் இருந்துள்ளார். இதனால் பரிதாபப்பட்ட கருணாகரன் 8 மாதங்களுக்கு முன்பு ஏழுமலையை தனது வீட்டில் தங்க அனுமதித்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஏழுமலை தனது அக்கா முறை உடைய வைத்தீஸ்வரியை கொஞ்சம் கொஞ்சமாக பேசி மனதை மாற்றி உள்ளார்.

பின்னர் வைத்தீஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மனைவியை மீட்க முடியாமல் நவம்பர் 20ஆம் தேதி கருணாகரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் வைத்தீஸ்வரி மற்றும் ஏழுமலையை  தேடி வந்தனர். இந்நிலையில் நவம்பர் 21 ஆம் தேதி இருவரும் மதுரையில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார், மதுரை சென்று இருவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் வைத்தீஸ்வரியை சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சொந்த ஊரான  சோ.குப்பம் கிராமத்திற்கு மனைவியை அழைத்துச் சென்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சோ குப்பம் கிராமத்தில் தைப்பூச திருவிழா நடந்துள்ளது. இதற்காக ஏழுமலை சொந்த ஊருக்கு வந்துள்ளார். திருவிழாவிற்கு வந்த ஏழுமலை மீண்டும் வைத்தீஸ்வரியின் மனதை மாற்றி இரண்டாவது முறையாக அழைத்துச் சென்று விட்டார். இதனை அறிந்து மனமுடைந்த கணவர் கருணாகரன். ஏழுமலை மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து மன உளைச்சலில் காணப்பட்ட கருணாகரன் செவ்வாய்கிழமை பிற்பகல் பயிருக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அவரது தாயார் அமராவதியும் மீதம் இருந்த மருந்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கைக்குழந்தை உட்பட 4 குழந்தைகளுடன் தவிப்பதாகவும், மைத்துனரிடம் இருந்து மனைவியை மீட்டுத்தருமாறு கணவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
First published: February 12, 2020, 9:31 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading