• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஐபிஎஸ் அதிகாரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மனைவி வரதட்சணை புகார்!

ஐபிஎஸ் அதிகாரி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மனைவி வரதட்சணை புகார்!

அருணா

அருணா

  • News18
  • Last Updated :
  • Share this:
ஐபிஎஸ் அதிகாரி மீது வரதட்சணை புகாரில் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையை சேர்ந்தவர் அருணா. இவர் யு.பி.எஸ்.சி தேர்வெழுத பயிற்சி மையத்தில் பயின்ற போது, ஆனந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

2016-ம் ஆண்டு ஆனந்த் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். ஆனந்த் மற்றும் அருணாவிற்கு 2017-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்காக பெண் வீட்டார் தரப்பில் சுமார் 500 சவரன் நகை மற்றும் சுமார் 4 கோடி ரூபாய் வரதட்சணை கொடுக்கபட்டதாக கூறப்படுகிறது.

2 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் அருணாவை, ஆனந்தும் அவரது தாய் மலர்கொடியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, வன்கொடுமை செய்து வந்ததாகவும், தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் அருணாவின் தந்தை நடத்திவரும் உணவகம் உள்ளிட்ட சொத்தையும் அபகரிக்க ஆனந்த் முயற்சி செய்ததாகவும் அருணா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மீது ஒரு வாரத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

காவல்துறையினர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆனந்திற்கு ஆதரவாக செயல்படுவதாக அருணா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும், இறுதியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: