கம்யூனிஸ்ட் கட்சியினரின் துண்டுதல் பேரில் பொய் புகார்; சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் மனைவி புகார்

பாஜக நிர்வாகி மகாலிங்கம்

தனது கணவர் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளதாக பாஜக பிரமுகர் மகாலிங்கத்தின் மனைவி ராஜலெட்சுமி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

  • Share this:
    மயிலாடுதுறையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பாஜக பிரமுகர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினரின் துண்டுதல் பேரில் பொய் புகார் அளித்துள்ளதாகவும், போலீசார் விசாரணை செய்யாமல் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர் மனைவி புகார் அளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்த பாஜக ஒன்றிய பொதுச் செயலாளரான மகாலிங்கம்(60) என்பவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உள்பட சில சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து பாலியல் இச்சையை தூண்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் 11ம்தேதி சிறையிலடைத்தனர்.

    Also read: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: பாஜக ஒன்றிய நிர்வாகியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

    இந்நிலையில், தனது கணவர் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளதாக பாஜக பிரமுகர் மகாலிங்கத்தின் மனைவி ராஜலெட்சுமி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். தனது இரண்டு மகள்களை மகாலிங்கம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்த அச்சிறுமிகளின் தந்தையான புகார்தாரர், கைது செய்யப்பட்ட மகாலிங்கத்திடம் தனது நிலத்தை அடமானம் வைத்து வட்டியில்லாமல் ரூ.6 லட்சம் கடன் பெற்றதாகவும், இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது, நிலத்தை மகாலிங்கத்தையே வைத்துக் கொள்ளச் சொல்லி, மீதப்பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

    Also read: பல்லடத்தில் குடியிருப்பில் நோட்டம் பார்த்த வடமாநில இளைஞர் - மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

    ஆனால் அவர் நிலத்துக்கு அதிக விலை சொன்னதால் நிலத்தை வேண்டாம் என்று மறுத்த மகாலிங்கம் பணத்தை திரும்பத்தர கேட்டுள்ளார். பணத்தை திரும்பத் தர முடியாததாலும், பாஜகவில் தனது கணவரின் வளர்ச்சியை பிடிக்காததால், கம்யூனிஸ்ட் கட்சியிருடன் சேர்ந்துகொண்டு மகளிர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும், உரிய விசாரணை செய்யாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தன் கணவரின் வழக்கில் உரிய விசாரணை செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    செய்தியாளர் - கிருஷ்ணகுமார்
    Published by:Esakki Raja
    First published: