கிரைண்டர் கல்லைப் போட்டுக் கணவனைக் கொன்ற மனைவி - வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரம்

திருமங்லம் அருகே உச்சப்பட்டியில் கணவனின் தலையில் கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

கிரைண்டர் கல்லைப் போட்டுக் கணவனைக் கொன்ற மனைவி - வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரம்
மாதிரிப் படம்
  • Share this:
உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவராஜிற்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவராஜிற்கு சென்னையில் உள்ள ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சிவராஜிற்கும் அவரது மனைவி கேத்தீஸ்வரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று தகராறு முற்றிய நிலையில், தூங்கிக்கொண்டிருந்த சிவராஜின் தலையில் கேத்தீஸ்வரி கிரைண்டர் கல்லை போட்டு கொல்ல முயன்றார்.

Also read... கோவை சாலைகளில் வேல் சின்னம் வரைந்த 5 பேர் கைது - இந்து அமைப்பினர் போராட்டம்


சிவராஜின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிவராஜ் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் கேத்தீஸ்வரியை கைது செய்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading