’கணவர் காப்பாற்றிவிடுவார் என்று நினைத்தேன்’ - பிரியாணிக்காக விளையாட்டாக செய்த செயல் இளம்பெண்ணின் உயிரைப் பறித்த சோகம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலையில் பிரியாணி கேட்டு கணவர் வாங்கி்த் தராததால் அவரை மிரட்ட விளையாட்டாக பெட்ரோல் ஊற்றித் தீ்க்குளித்த மனைவி, உயிரிழந்துள்ளார்.

  • Share this:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் 34 வயதான மனோகரன் - 29 வயதான செளமியா தம்பதி. 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 11 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர்

மனோகரன், மாமல்லபுரத்தில் சிற்பக் கலைக்கூடத்தில் பணிபுரிகிறார். செளமியா நுாறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்து வந்தார். வியாழக்கிழமை மதியம், மனைவியையும் குழந்தைகளையும் பைக்கில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டார். அப்போது பக்கத்து வீட்டினர், மனோகரனிடம் 150 ரூபாய் கொடுத்து தங்களுக்குப் பிரியாணி வாங்கித் தந்து உதவும் படி கேட்டுள்ளனர்

அதைக் கேட்ட செளமியாவும் பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாகி விட்டது என்றும் தனக்கும் குழந்தைகளுக்கும் பிரியாணி வாங்கித் தரும்படியும் கணவரிடம் கேட்டுள்ளார். ஊரடங்கால் ஏற்கனவே வருமானம் இல்லாத நிலையில் தற்போது பிரியாணி வாங்கும் அளவுக்குப் பணமில்லை என்று கூறி விட்டு சென்ற மனோகரன் பக்கத்து வீட்டிற்கு பிரியாணி வாங்கிக் கொடுத்து விட்டார்.


பின்னர் வீட்டில் அமர்ந்து குழந்தைகளுடன் சாப்பிட்டார்; அப்போது கணவன் - மனைவி இடையே சின்னச் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மனோகரன், செளமியாவைப் பார்த்து உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கோபமடைந்த செளமியா, 2-வது மாடியில் இருந்து கீழே இறங்கி சென்று கணவரின் வாகனத்தில் இருந்த பெட்ரோலை கேனில் பிடித்து மொட்டை மாடிக்கு சென்று அங்கு ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு மனோகரன் உள்ளிட்டவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழியில், உறவினர்கள் செளமியாவிடம் ஏன் இப்படி செய்தாய் எனக் கேட்க, என்னை பிடிக்கவில்லை என்று கணவர் கூறியதால் விளையாட்டாக இப்படி செய்தேன்; அவர் காப்பாற்றி விடுவார் என நினைத்து செய்தேன் என கூறியுள்ளார் செளமியா.மேலும் கணவரையும் குழந்தைகளையும் விட்டுப் பிரிவது மிகவும் வேதனையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 80 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட செளமியா சிகி்ச்சை பலனின்றி வியாழன் இரவே உயிரிழந்தார்.
மாமல்லபுரம் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரி்தது வருகின்றனர்.கணவன் - மனைவி இடையே சிறு தகராறுகள் ஏற்பட்டாலும் எந்த அளவில் அதை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும். செளமியாவின் உணர்ச்சிகரமான முடிவு இதற்கு ஓர் உதாரணம்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading