குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனைவி தற்கொலை... கணவனும் இறந்த சோகம்

குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனைவி தற்கொலை... கணவனும் இறந்த சோகம்
மாதிரி படம்
  • Share this:
குடிப்பழக்கத்தை கணவன் கைவிடாததால் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் வேதனையடைந்த கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகையைச் சேர்ந்த சிவக்குமார் - சரண்யா. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிலை செய்யும் சிற்பியாக இருந்த சிவக்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்துள்ளார். சனிக்கிழமை டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்ததோடு, ஞாயிற்றுக்கிழமை குடிப்பதற்காக மதுபாட்டில்களை வாங்கி வந்துள்ளார் சிவக்குமார்.இதனால் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட மனமுடைந்த சரண்யா, புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், சிவக்குமாரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading