சொந்த வீட்டில் நகையை திருடி நாடகமாடி கைதான மனைவி... அவமானம் தாங்க முடியாமல் கணவர் தற்கொலை...!

சொந்த வீட்டில் நகையை திருடி நாடகமாடி கைதான மனைவி... அவமானம் தாங்க முடியாமல் கணவர் தற்கொலை...!
(மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: April 8, 2020, 9:33 PM IST
  • Share this:
தூத்துக்குடியில் சொந்த வீட்டில் 100 சவரன் நகையை திருடி நாடகமாடிய மனைவி கைதான நிலையில், அவமானம் தாங்க முடியாமல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி தாளமுத்துநகரை அடுத்துள்ள பெரிய செல்வம் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட். தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஜான்சி.

கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த 100 சவரன் நகைகள் கொள்ளை போனது. அதிர்ச்சியடைந்த வின்சென்ட் தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் வின்சென்டின் மனைவி ஜான்சி நகையை திருடியது தெரிந்தது. இதை அடுத்து நகையை மீட்ட போலீசார் சொந்த வீட்டிலேயே திருடிய ஜான்சியை கைது செய்தனர்.

இந்த செய்தி வின்சென்டின் உறவினர்கள், துறைமுகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு தெரிந்து விசாரித்துள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை வீட்டில் தனியாக இருந்த வின்சென்ட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலை நெடு நேரம் வீடு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வின்சென்ட் தூக்கில் சடலமாக தொங்கினார். இது குறித்து அவர்கள் தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வின்சென்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வின்சென்ட் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சொந்த வீட்டில் மனைவி திருடி சிறை சென்றதால், அவமானத்தில் கனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading