பழகிய நான்கு நாட்களில் கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது

Youtube Video

கட்டிய கணவனை கள்ளகாதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் கோவை அருகே நடந்துள்ளது. நான்கு நாள் கள்ளக்காதல் கணவனுக்கு எமனானது எப்படி?

 • Share this:
  கோவை மாவட்டம் நெகமம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் 35 வயதான நாகராஜன் முதல் மனைவி இறந்து விடவே கடந்த 8 மாதங்களுங்கு முன்பு மதுக்கரையைச் சேர்ந்த கணவனை இழந்த 33 வயதான அமுதா என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

  அமுதாவுக்கு முதல் கணவர் மூலம் 3 குழந்தைகள் உள்ளனர் நாகராஜனும், அமுதாவும் மதுக்கரையில் உள்ள அமுதா இல்லத்தில் வசித்து வந்தனர்.சீரப்பாளையம் பகுதியில் உள்ள அமலன் மினரல்ஸ் என்ற கோலப்பொடி நிறுவனத்தில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர்.

  நிறுவனத்திலேயே தங்கி கோலப்பொடியினை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.அந்த நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

  அவருக்கும் அமுதாவிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு நான்கே நாட்களில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.திங்கட்கிழமை வெளியே சென்ற நாகராஜன், செவ்வாய்க்கிழமை தங்கியிருந்த கம்பெனிக்கு திரும்பி வந்தார்.

  அப்போது. சங்கரும் அமுதாவும் ஒன்றாக இருந்ததைப் பார்த்து ஆத்திரமடைந்தார்.சங்கருடன் நாகராஜன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்; ஆத்திரமடைந்த சங்கர், கையில் இருந்த சுத்தியலால் நாகராஜன் தலையில் ஓங்கி அடிக்க அங்கேயே விழுந்து நாகராஜன் உயிரிழந்தார்.  இதையடுத்து நிறுவன வளாகத்தில் இருந்த மண்ணை போட்டு நாகராஜனின் உடலை சங்கரும், அமுதாவும் மூடி வைத்தனர்; எனினும் இருவரும் அந்த இடத்தை விட்டு தப்பியோடவில்லை

  விடிந்த உடன் நிறுவன உரிமையாளரிடம் சங்கர் நேரில் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தார்; உரிமையாளர், மதுக்கரை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மண் போட்டு மூடி வைத்திருந்த நாகராஜனின் சடலத்தை மீட்டனர்.

  சங்கர் மற்றும் அமுதா மீது கொலை வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: