• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மின்சார உற்பத்தி ஒப்பந்தம் அதிக விலைக்கு போடப்பட்டது ஏன்? முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில்

மின்சார உற்பத்தி ஒப்பந்தம் அதிக விலைக்கு போடப்பட்டது ஏன்? முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில்

முன்னாள் அமைச்சர் தங்கமணி

முன்னாள் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் சேவை செய்யக்கூடிய ஒரு துறையில் மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்யவே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றார் தங்கமணி.

  • Share this:
2018 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் 14 ஆயிரம் கோடி நஷ்டம் மட்டுமே ஏற்பட்டு உள்ளது ஊழல் எதுவும் நடைபெறவில்லை, இதுகுறித்து எந்த இடத்திலும் பதில் கூறுவதற்கு தயாராக உள்ளதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாlளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி:

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு மின்சாரத்துறையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கை துறை அறிக்கை வழங்கியுள்ளது ஆனால் அதில் ஊழல் நடந்து உள்ளது போல பொய்யான கருத்துக்கள் வெளியாகி உள்ளது என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு துறையாக மட்டுமே உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து பொருட்களும் விலையேற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இல்லாத அளவிற்கு மின்தடை இல்லாமல் மின்சாரம் வழங்கினோம். கடந்த 5 ஆண்டுகளில் மின்சார விலையேற்றம் இல்லை என்றும் பொதுமக்களுக்கு மாதம் மாதம் 100 unit இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டது.

Also Read : நினைத்த தேதியில் குழந்தை பெற்றெடுக்க விரும்பும் பெற்றோர்... கடிவாளம் போட்ட அமைச்சர மா.சுப்பிரமணியன்

இதனால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அதில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது என்றும் தமிழகத்தில் 11 லட்சம் குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் நீண்டகால கொள்முதல் காரணத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று கூறி வருவது பொய். திமுக ஆட்சியில் இருந்த நேரத்தில் 31 ஆண்டுகள் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.
தணிக்கை துறை சார்பாக 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக அறிக்கை வழங்கி இருப்பதாக கூறிய அவர் தணிக்கை துறை அனைத்து ஆட்சியிலும் இதனை இவ்வாறு செய்து இருந்தால் நஷ்டம் ஏற்பட்டு இருக்காது என்று கூறுவார்கள்.

Also Read : தமிழகத்தில் 21 மாவட்டங்களில்  100 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை

ஆனால் தமிழகத்தில் சேவை செய்யக்கூடிய ஒரு துறையில் மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்யவே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிகின்ற நேரத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்ததாகவும் 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் நேரத்தில் அந்த கடன் 45 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது இருக்கும் கடனில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு கடன் மட்டுமே, தமிழகத்தில் அந்த பணிகள் முடியும் நேரத்தில் அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.

2015 ஆம் ஆண்டு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க நிறுவனங்கள்  தயாராக இருந்த நிலையில் 12 ரூபாய் 77 பைசாவிற்கு ஏன் ஒப்பந்தம் போடப்பட்டு என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த நேரத்தில் மின் தட்டுப்பாடு இருந்த காரணத்தாலும் அதே போன்று குறைவான விலைக்கு ஒப்பந்தாம் வழங்க தயாராக இருந்த நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்க தயாராக இருந்தது. தமிழகத்தின் தேவை அதிகமாக இருந்த காரணத்தால் 1 ஆண்டிற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதுகுறித்து இங்கு வேண்டும் என்றாலும் பதில் அளிக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: