• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? சசிகலா விளக்கம்

தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தது ஏன்? சசிகலா விளக்கம்

சசிகலா

சசிகலா

சட்டமன்ற தேர்தலின் போது அமைதியாக இருந்தது ஏன் என்று சசிகலா தற்போது பதிலளித்துள்ளார்.

  • Share this:
    அதிமுக தொடங்கப்பட்டதன் 50வது ஆண்டு பொன்விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டையொட்டி சென்னை பாண்டிபஜாரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தந்த சசிகலா அதிமுக கொடியேற்றினார். இதையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலளார் சசிகலா என குறிப்பிடப்பட்டிருந்த கல்வெட்டு ஓன்றையும் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து ராமாவரம் தோட்டத்திற்கு சென்ற சசிகலா அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அதிமுக பொன்விழா மலரை வெளியிட்டார். ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உறவினர்களிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார்.



    அதில், நம் கட்சியினர் யாரும் பொதுக்கூட்டத்தில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம். கண்போன போக்கிலே கால் போகலாமா, கால்போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்ற எம் ஜி ஆர் பாடல் இப்போது யாருக்கு பொருந்துகிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

    இக்கட்டான சூழலிலும் கட்சியை ஆட்சியில் அமர்த்தி விட்டுத்தான் சென்றேன். நமக்கு ஒற்றுமைதான் முக்கியம் நீர் அடித்து நீர் விலகாது கழக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும் கழகம் வென்றாக வேண்டும் அதிமுக என்னும் ஆல மரத்திற்கு எம்ஜிஆர் விதையாக இருந்தார், ஜெயலலிதா மழை யாக இருந்தார். என்னால் இந்த இயக்கத்திற்கு எள்ளளவும் பாதிப்பு ஏற்பட கூடாது என்று தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்தேன் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: