தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்தால் இந்தி தெரியாமல் கடினமாக இருக்கும் : தமிழர்களுக்கு மார்க்கண்டேய கட்ஜு அறிவுரை

தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்தால் இந்தி தெரியாமல் கடினமாக இருக்கும் : தமிழர்களுக்கு மார்க்கண்டேய கட்ஜு அறிவுரை

கட்ஜு.

ஒருமுறை கன்னடர் ஒருவரும் தெலுங்கு நபர் ஒருவரும் இந்தியில் உரையாடியதைக் கேட்டேன், ஏனெனில் இருவருக்கும் அது தொடர்பு மொழி, இணைப்பு மொழி, காரணம் கன்னடருக்கு தெலுங்கு தெரியாது, தெலுங்கருக்கு கன்னடம் தெரியாது.

  • Share this:
தமிழர்கள் அடிக்கடி என்னிடம் ஹிந்தி மொழியை ஏன் கற்க வேண்டும் என்று கேட்கிறார்கள்? அது ஒரு இணைப்பு மொழி அதனால் கற்றுக் கொண்டால் நல்லது என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன் முகநூல் பதிவில் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்டவைகளை எதிர்த்து காலங்காலாமாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் தன் முகநூல் பக்கத்தில் ஹிந்தி ஏன் கற்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஹிந்தி மொழியைக் கற்க வேண்டும் ஏனென்றால் தமிழை விட 15 மடங்கு அதிகமானவர்கள் ஹிந்தி பேசுகின்றனர். உபி, பீகார், எம்பி, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், உத்தர்காண்ட் உள்ளிட்ட பெரும்பாலும் ஹிந்திபேசும் பகுதிகள் மட்டுமல்ல.

குஜராத்தியர்கள், மராத்தியர்கள், பஞ்சாபிகள், காஷ்மீரிகள், ஒடிசா மக்கள், பெங்காலிகள், வடகிழக்கு மக்கள், பல தென் இந்தியர்கள் என்று தாய்மொழி இந்தி அல்லாதவர்களும் இந்தி மொழியைப் பேசுகின்றனர்.

நான் அந்தமான் தீவுகளுக்குச் சென்ற போது அங்கு அனைவரும் ஹிந்தி பேசுவதைக் கண்டேன். பாகிஸ்தானியர்களும் இந்திதான் பேசுகின்றனர், ஆனால் அவர்கள் அதை உருது என்று அழைக்கின்றனர்.

தமிழர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்தால் ஹிந்தி தெரியாமல் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஆங்கில மொழி 5-10% மக்களுக்குத்தான் தெரியும். இது என் பரிந்துரை மட்டும்தான் திணிப்பு அல்ல. நான் கூறுவதில் அர்த்தமிருக்கிறது என்றால் தமிழர்கள் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையேல் விட்டு விட வேண்டும்.

தமிழர்கல் பலர் நாங்கள் இந்தி கற்க வேண்டுமென்றால் இந்தி பேசுபவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்கின்றனர். இதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. இந்தியாவில் ஏகப்பட்ட மொழிகள் உள்ளன, ஒரு மொழியைக் கற்க வேண்டுமெனில் குறைந்தது ஓர் ஆண்டு ஆகும். இந்தியாவின் மொழிகள் அனைத்தையும் ஒருவர் கற்பது என்பது இயலாத காரியம். ஆங்கிலம் கற்க வேண்டும் ஏனெனில் அது அறிவியலின் மொழி. இந்தி மொழியைக் கற்க வேண்டும் ஏனெனில் அது பரவலாகப் பேசப்படுகிறது.

ஒருமுறை கன்னடர் ஒருவரும் தெலுங்கு நபர் ஒருவரும் இந்தியில் உரையாடியதைக் கேட்டேன், ஏனெனில் இருவருக்கும் அது தொடர்பு மொழி, இணைப்பு மொழி, காரணம் கன்னடருக்கு தெலுங்கு தெரியாது, தெலுங்கருக்கு கன்னடம் தெரியாது. ஆனால் இருவருக்கும் இந்தி தெரியும். இந்தி தெரியவில்லை இருவரும் தொடர்பு கொள்ள முடியாது.

இவ்வாறு அந்த முகநூல் பதிவில் அவர் கூறியுள்ளார்.
Published by:Muthukumar
First published: