தமிழிசை, கனிமொழியின் வேட்புமனுக்கள் தாமதமாக ஏற்கப்பட்டதற்கு என்ன காரணம்?

சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தென்காசியில் களமிறங்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோரன் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழிசை, கனிமொழியின் வேட்புமனுக்கள் தாமதமாக ஏற்கப்பட்டதற்கு என்ன காரணம்?
கனிமொழி | தமிழிசை
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:21 PM IST
  • Share this:
தமிழகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், தமிழிசை, கனிமொழி உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் சிறிய தாமத்திற்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கடலூரில் அமமுக வேட்பாளரின் வேட்பு மனுவும், மானாமதுரை, காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

தூத்துக்குடியில் களமிறங்கும் பாஜக வேட்பாளர் தமிழிசையின் வேட்பு மனு சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டது.


பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பது, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்த தகவல் வேட்பு மனுவில் இடம்பெறாததால் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தீவிர பரிசீலனைக்கு பிறகு மனு ஏற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதேபோல், அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்பு மனுவும் சிறிய தாமத்திற்கு பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டது.

10 பேருடன் தேர்தல் அதிகாரி அறைக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்ததால், ஒசூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கும் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டியின் மனுவை ஏற்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டது.தலைநகர் சென்னையை பொறுத்தவரை, மத்திய சென்னையில் களமிறங்கும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், பாமக வேட்பாளர் சாம் பால் ஆகியோரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது வருமானம் உட்பட பல்வேறு குளறுபடிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவர்களது மனுக்கள் மீதான பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இருதரப்பினரின் ஆவணங்களை ஆராய்ந்து, சரிபார்த்த பிறகு ஏற்கப்பட்டது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக 69 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த தென்சென்னை தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, இந்திய குடியரசுக் கட்சி வேட்பாளர் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டடோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

வடசென்னையில் கலாநிதி வீராசாமி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரின் மனுக்களும் ஏற்கப்பட்டன

தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், திமுக வேட்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 23 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், சுயேட்சை வேட்பாளர்கள் மூவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் மலர்விழி தெரிவித்தார்.கடலூர் அமமுக வேட்பாளர் கார்த்திக் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அவரை முன்மொழிந்த 10 பேரில் இருவரின் வாக்காளர் படிவத்தில் மாறுதல் இருந்ததால், கார்த்திக்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனுவில் உரிய இடத்தில் கையொப்பம் இல்லாததால், மானாமதுரை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தங்கராஜ், காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், மனுவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவருடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களை தவிர, சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தென்காசியில் களமிறங்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோரன் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

மேலும் பார்க்க:
First published: March 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading