Home /News /tamil-nadu /

பிள்ளையார் சிலைகளை கடலிலும், நீர்நிலைகளிலும் கரைக்கவேண்டாம் - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விளக்கம்

பிள்ளையார் சிலைகளை கடலிலும், நீர்நிலைகளிலும் கரைக்கவேண்டாம் - பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விளக்கம்

பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள்

கடலில் உள்ள சின்ன உயிரினங்கள் பாதிப்படையும் போது நமக்கான ஆக்சிஜன் கிடைப்பது சிக்கலாகும்.’

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்த நிலையில் இந்த ஆண்டு, வளர்ப்பிறை சதுர்த்தி தினமான இன்று, உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பிள்ளையார் சிலைகளை கடலிலும், நீர்நிலைகளிலும் கரைக்கக்கூடாது ஏன் என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கதைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பிள்ளையார் உள்ளிட்ட எந்த சிலைகளையும் கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது. இரசாயண வண்ணங்கள் மற்றும் பிஓபி கொண்டு செய்யப்படும் சிலைகள் கடலில் உள்ள உயிர்வளியை குறைக்கும் அதனால் கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

    வண்ணங்களில் பயன்படுத்தப்படும் கன உலோகங்கள் சின்னசின்ன உயிரினங்களில் படியும், அவற்றை சின்ன மீன்கள் உட்கொள்ளும், சின்னவைதான் பெரிய மீன்களுக்கு உணவு, பெரிய மீன்தான் நமக்கு உணவு, அப்படியெனில் நம்முடைய உணவுச் சங்கிலிக்கு கனஉலோகங்கள் வந்து சேரும். கடலில் உள்ள சின்ன உயிரினங்கள் பாதிப்படையும் போது நமக்கான ஆக்சிஜன் கிடைப்பது சிக்கலாகும்.’

     



    ஏனெனில் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனில் 70% தயாரிப்பது கடலில் உள்ள சின்னசின்ன உயிரினங்கள்தான். ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் கடலின் அமிலத்தன்மை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதான் கோருகிறோம், கடலில் எந்த சிலைகளையும் கரைக்கவேண்டாம் என்று” தெரிவித்துள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Ganesh Chaturti, Poovulagin Nanbargal, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி