உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது ஏன்? நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ்

ராமதாஸ்

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை என்று, கட்சி நிர்வாகிகளிடம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பேசியுள்ளார்.

  • Share this:
    புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9 ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறித்து, பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கட்சி வளர்ச்சி கருதி தனித்துப்போட்டியிட ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிக்கையை வெளியிட்டார்.

    இந்நிலையில் கூட்டத்தில் ராமதாஸ் கூறிய கருத்துகள் தற்போது வெளியாகியுள்ளன. கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ராமதாஸ், பாமகவால் கூட்டணி கட்சிகள் பலனடைந்துள்ளதாகவும் மாறாக அவர்களால் பாமகவுக்கு எந்த பலனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    எனவே ஊரக உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப்போட்டியிட்டு பாமகவின் வாக்கு சதவீதத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார். மேலும் சரியான தலைமை இல்லாததால், அதிமுக தொண்டர்கள் பாமகவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் ராமதாஸ் பேசியுள்ளார்.

    Also Read : அண்ணா பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மரியாதை

    தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது பாமக. அந்த தேர்தலில் பாமக சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: