ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ கூட்டத்தில் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?

‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ கூட்டத்தில் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?

அமைச்சர் சி.வி.சண்முகம்

அமைச்சர் சி.வி.சண்முகம்

ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக, பிஜு ஜனதாதளம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்றி நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  ‘ஒரு நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.

  4 மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒரு நாடு, ஒரே தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்ற செயல்பாடுகளை மேம்படுத்துவது, புதிய இந்தியாவை கட்டமைப்பது உள்ளிட்ட 5 விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

  இதில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

  அதிமுக சார்பில் கலந்துகொள்ள மாநில சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் சென்றனர்.

  ஆனால், தலைவர் அல்லது பொதுச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்களே கலந்துகொள்ள முடியும் என்பதால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தங்களது கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக அவர்கள் அளித்தனர்.

  இதில், ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக, பிஜு ஜனதாதளம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஆதரவு தெரிவிப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Sankar
  First published:

  Tags: CV Shanmugam