தனித்தனியாக அறிக்கைகள்.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்துகொள்ளாதது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்

எடப்பாடி பழனிசாமி

தற்போது மக்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று தான் அழைத்து வருகின்றனர். அதுதான் நடைமுறையில் உள்ளது. அதன்படி தான் அழைக்க முடியும் என்றார்.

 • Share this:
  சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து, அக்கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்துவது வழக்கம். எனினும், சமீப நாட்களாக, அவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து, தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

  இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், இருவரும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஓ.பன்னீர்செல்வம் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், நான் எதிர்கட்சித் தலைவர். அதனால், ஆளும் கட்சி விமர்சனம் செய்யும்போது, அதற்கு தேவையான பதிலை நான் அளிக்கின்றேன். பொதுவாக வரும் செய்திகளை அவர் தெரிவிக்கிறார். சென்னையில் ஓபிஎஸ் இன்று புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார்.

  தொடர்ந்து, அவரிடம் ஒன்றிய அரசு என்று மத்திய அரசை அழைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தற்போது மக்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று தான் அழைத்து வருகின்றனர். அதுதான் நடைமுறையில் உள்ளது. அதன்படி தான் அழைக்க முடியும் என்றார்.

  அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசுவது போன்று வெளிவரும் ஆடியோக்கள் குறித்து கேட்டபோது, சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக பத்திரிகைகளுக்கு அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். எனவே அந்த ஆடியோக்கள் குறித்து கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. அவர் அமமுக தொண்டர்களுடன்தான் பேசிவருகிறார். சசிகலா பேசியதை வைத்து அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முடியாது என்று அவர் கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: