முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னை மாநகராட்சி அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய கூடாது? உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி

சென்னை மாநகராட்சி அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய கூடாது? உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி

சென்னை மாநகராட்சி - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை மாநகராட்சி - சென்னை உயர் நீதிமன்றம்

Chennai High Court | உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அளித்த உறுதி மற்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆக்கிரமிப்பை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகராட்சி அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை எருக்கன்சேரி சேர்ந்த சத்தியநாதன், சித்ரா பொதுசாலை ஆக்கிரமித்து கட்டிடம் உள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட வேண்டும் என ரவீந்திர ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்க்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும் விளக்கம் கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கபடும் என மாநகராட்சி தரப்பில் உறுதிமொழி அளிக்கபட்டது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு இருப்பின் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடபட்டது.

Also Read : என் தாயை பற்றி பேச சசிகலாவிற்கு அருகதை இல்லை.. சட்டப்படி நடவடிக்கை பாயும்.. ஜெ. தீபா எச்சரிக்கை!

உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அளித்த உறுதி மற்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கோரி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, பொறியாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்பதாவது மண்டல உதவி பொறியாளர் பார்த்திபன் ஆகியோர்க்கு எதிராக ரவீந்திர ராம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பிறகும் ஏன் இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிட நீக்கம் செய்ய ஏன் உத்திரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினர். பின்னர் ஆக்கிரமிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

First published:

Tags: Chennai corporation, Chennai High court, Madras High court