முகப்பு /செய்தி /தமிழ்நாடு / என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்காதது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்காதது ஏன்? அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வாக்கு எண்ணிக்கை முடிந்தும் 24 மணி நேரத்திற்கு மேலாகியும் முடிவுக்காக நான்கு மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கிறேன் என்று விஜயபாஸ்கர் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில்  குளறுபடி நடைபெறுவதாக புகார் தெரிவித்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. விராலிமலை தொகுதியில் இரவு முழுவதும் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கயைில் 17,000 வாக்குகள் எண்ணப்பட உள்ளநிலையில் விஜயபாஸ்கர் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளதால் அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல் சுற்றிலேயே இரண்டாயிரம் வாக்குகள் பெற்று அபரிவிதமாக வருபவர்களில் தேர்தல் முடிவை தேர்தல் ஆணையம் விரைந்து அறிவிக்க வேண்டும் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில் உள்ளேன். ஜனநாயக முறைப்படி நேர்மையாக அறிவிக்கப்பட வேண்டிய முடிவை அறிவிக்க மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மொத்தமாக அனைத்து தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு மேலாகியும் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கும் என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்காதது ஏன்?

எள்ளளவு கூட அதிமுகவினர் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை என்ற எங்களது கருத்தை ஆழமாக தெரிவிக்கின்றோம். உடனடியாக தனது வெற்றியை அறிவித்து வெற்றி சான்றிதழை வழங்க வேண்டும். அதுதான் நியாயம், அதுதான் நேர்மை என தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்துகிறேன் என்றுள்ளார்.

First published:

Tags: Minister Vijayabaskar, TN Assembly Election 2021