ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஏன் அவசரச் சட்டம் கொண்டு வரக்கூடாது - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஏன் அவசரச் சட்டம் கொண்டு வரக்கூடாது - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு ஏன் அவசர சட்டம் கொண்டு வரக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

  • Share this:
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் இன்று பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு சிலர் தற்கொலையும் செய்துகொள்வதால், அதை உடனே தடை செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் தாக்கல் செய்த மனுவில், பலர் தற்கொலை செய்ய காரணமாக இருக்கும் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.அப்போது, ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது சட்டசபை இயங்காததால் சட்டம் இயற்ற கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சட்டசபை கூடாவிட்டால் என்ன, அவசர சட்டம் அல்லது திருத்தம் கொண்டு வரக்கூடாதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பல உயிர்கள் பலியாவதால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Published by:Rizwan
First published: