ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின்சார வாகன சந்தையில் இன்னும் நுழையாத மாருதி சுசுகி - காரணத்தை விளக்கிய நிறுவனம்!

மின்சார வாகன சந்தையில் இன்னும் நுழையாத மாருதி சுசுகி - காரணத்தை விளக்கிய நிறுவனம்!

வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் EV கார் தயரிப்பு சாத்தியமாக்கும்போது மட்டுமே அதில் நிறுவனம் நுழையும் என்றும், ஏனெனில் நிறுவனம் நஷ்டம் இல்லாமல் செயல்பட வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் EV கார் தயரிப்பு சாத்தியமாக்கும்போது மட்டுமே அதில் நிறுவனம் நுழையும் என்றும், ஏனெனில் நிறுவனம் நஷ்டம் இல்லாமல் செயல்பட வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் EV கார் தயரிப்பு சாத்தியமாக்கும்போது மட்டுமே அதில் நிறுவனம் நுழையும் என்றும், ஏனெனில் நிறுவனம் நஷ்டம் இல்லாமல் செயல்பட வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

 • 2 minute read
 • Last Updated :

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் தற்போது நாட்டில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதோடு, போட்டிபோட்டுக் கொண்டு EV வாகன விற்பனையில் இறங்கியுள்ளன. ஆனால் தற்போதுவரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்த மின்சார வாகன பந்தயத்தில் இணையவில்லை. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள மாருதி சுசுகி நிறுவனம், இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன பந்தயத்தில் இப்போதே இணைய வேண்டும் என்ற அவசரம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.

  மத்திய அரசாங்கம் EV- வாகனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ஒரு EV வாகனம் என்பது சாத்தியமானதாக இருக்கும்போது மட்டுமே நிறுவனம் இந்த விற்பனை பந்தயத்தில் நுழையும் என்று நிறுவனம் கூறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 24ம் தேதி) நடைபெற்ற நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களிடையே உரையாற்றிய நிறுவனத் தலைவர் ஆர்சி பார்கவா, நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் மின்சார வாகன (EV) சந்தையில் நுழைவதற்கான சரியான நேரம் குறித்து பார்த்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் EV கார் தயரிப்பு சாத்தியமாக்கும்போது மட்டுமே அதில் நிறுவனம் நுழையும் என்றும், ஏனெனில் நிறுவனம் நஷ்டம் இல்லாமல் செயல்பட வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார். EV களுக்கான நிறுவனத்தின் வருங்கால திட்டங்களைப் பற்றி அவர் பேசுகையில், மின்சார வாகனங்கள் நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும்போது மட்டுமே இந்தியாவில் EV-க்கள் அதிக அளவில் ஊடுருவ முடியும் என்று கூறியுள்ளார்.

  மேலும் அவர் கூறியதாவது, "மாருதி கட்டாயம் எலக்ட்ரிக் வாகனத் துறையில் இருக்கும். நாங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவோம். இந்த எலக்ட்ரிக் வாகனங்களை நியாயமான எண்ணிக்கையில் நல்லபடியாக விற்பனை செய்வதற்கான சாத்தியமான நேரம் வரும். அப்போது அதை செய்வோம். முழு செயல்பாட்டிலும் எந்த ஒரு இழப்பும் ஏற்படாத வகையில் விற்பனையை செய்வோம், ”என்று பார்கவா குறிப்பிட்டுள்ளார். டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார் அண்ட் கோ போன்ற நிறுவனங்களுடன் மின்சார வாகன இயக்கத்திற்கு மாற ஆட்டோமொபைல் தொழில்துறை ஏற்கனவே தயாராகிவிட்டது.

  Also read... மகேந்திரா முதல் சஃபாரி வரை - ரூ.20 லட்சத்துக்கும் குறைவான TOP 7 சீட்டர் எஸ்.யூ.வி கார்கள்!

  மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகன (FAME) திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை இரண்டு வருடங்கள் அதாவது 2024 மார்ச் 31 வரை நீட்டித்து இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு மின்சார வாகனங்களின் இயக்கம் ஒரு வெற்றிகரமான மாற்றமாக இருக்கும் என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த் முன்னதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  First published: