ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

”நீதித்துறையை களங்கப்படுத்துவதை அனுமதிப்பது பாஸிசத்தை வளர்ப்பதாகவே அமையும்” - உயர்நீதிமன்றம்

”நீதித்துறையை களங்கப்படுத்துவதை அனுமதிப்பது பாஸிசத்தை வளர்ப்பதாகவே அமையும்” - உயர்நீதிமன்றம்

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. எதற்காக வழக்கு தொடர்ந்தது என்பதற்கான விளக்கத்தையும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் முழு விவரம் :

  "பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கக்கூடாது என்றும்; சக நீதிபதிகள் அவமானப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே எடுக்கட்டும் என சில நீதிபதிகள் மறுத்துவிடுவார்கள் அல்லது காத்திருப்பார்கள்.

  ராஜாவின் வீடியோ உலகம் முழுக்க பரவியது என்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது என்பதால் மதுரையில் கிளையில் பார்த்துக் கொள்ளட்டும் என சிலர் நினைக்கக்கூடும்.

  காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளதால், அந்த விசாரணை நல்ல முறையில் முடியும் என காத்திருப்பவர்களும் இருப்பார்கள். ஆனால் அரசும், காவல்துறையும் போகிற போக்கில் மறப்போம், மன்னிப்போம் என விசயத்தை மறந்து விடுவார்கள்.

  நீதி பரிபாலனம் செய்வதில் நீதிபதிகள் தான் அச்சானி என்பதை உணர்ந்து, நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை. எனவே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்றங்களின் மாண்பை காக்க வேண்டியதும் கடமை.

  ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் ஒரு முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும்.

  அதனால் திருமயம் பகுதியில் ஹெச்.ராஜா பேசிய நீதிமன்றம் குறித்த பேச்சு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை எடுக்கிறோம். அக்டோபர் 22ஆம் தேதி முன்னர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.”

  மேலும் படிக்க:

  ஹெச். ராஜா என்ன பேசினார்?

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: BJP, Chennai, H.raja, H.raja speech, Madras High court, Suo Motu Case