வேறு தொழிலுக்கு செல்லும் நெசவாளர்கள்... காஞ்சிபுரம் பட்டிற்கு மவுசு குறைகிறதா..?

காஞ்சிபுரம் பட்டு, இன்று ஜிஎஸ்டி வரி, போலிகளின் வரவு போன்ற காரணங்களால் மெல்ல மெல்ல புகழ் மங்கத் தொடங்கியிருக்கிறது.

வேறு தொழிலுக்கு செல்லும் நெசவாளர்கள்...  காஞ்சிபுரம் பட்டிற்கு மவுசு குறைகிறதா..?
காஞ்சிபுரம் பட்டு
  • News18
  • Last Updated: February 15, 2020, 9:32 AM IST
  • Share this:
காஞ்சிபுரம் பாரம்பரிய பட்டுத் தொழிலை செய்து வரும் நெசவாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

பட்டு என்று சொன்னால் காஞ்சிபுரம்தான் முதலில் எல்லோருக்கும் நினைவில் வரும். மொழி கடந்து, மாநிலம் கடந்து, உலகம் முழுக்கவுள்ள பட்டுப் பிரியர்களால் விரும்பப்படும் காஞ்சிபுரம் பட்டு, இன்று ஜிஎஸ்டி வரி, போலிகளின் வரவு போன்ற காரணங்களால் மெல்ல மெல்ல புகழ் மங்கத் தொடங்கியிருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நெசவாளர்களின் எண்ணிக்கை தற்போது அதில் 20 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், காஞ்சிபுரம் கைத்தறி பட்டுச் சேலைகளின் விற்பனை பெருமளவு சரிந்து, நெசவாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையின் பிடிக்குள் சிக்கி வருகின்றனர்.இதனால் வேறு தொழிலுக்கு செல்கின்றனர்.


பாரம்பரிய தொழிலை காக்க பயிற்சி பட்டறை அமைத்து தேவையான உபகரணங்களை மத்திய, மாநில அரசு அளிக்க வேண்டும் என கூறும் நெசவாளர்கள், கைத்தறி கூட்டுறவு சங்கங்களை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் முன்வைக்கின்றனர்.

9 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவடையாமல் நீளும் பட்டுப் பூங்கா பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்துகின்றனர். எஞ்சிய நெசவாளர்கள் மகிழ்ச்சியாகவும், லாபத்துடனும் நெசவு நெய்ய சலுகைகளும், மானியங்ளையும் மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்த்து இவர்கள் காத்திருக்கின்றனர்.
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்