Home /News /tamil-nadu /

அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது ஏன்? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்

அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

Minister Raghupathi : சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் தான் அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது என்றும் இதில் யாருக்கும் சாதகமாக தமிழக அரசு செயல்படவில்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் வந்தார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கள், கட்டைகளால் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால், அப்பகுதியே போர்களம் போல காட்சியளித்தது.

அத்துடன் அதிமுக அலுவலக கதவும் உடைக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் லேசான தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த மோதலின் போது, காவல் துறையைச் சேர்ந்த 2 பேர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வருவாய் அலுவலர்கள் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது குறித்து, சென்னை தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி  வெய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பிரச்னையில் நாங்கள் யாருக்கும் உடந்தையாக இல்லை என்றும், அங்கே பிரச்னை செய்கிறவர்கள் நாங்கள் பிரச்னை செய்ய போகிறோம் என கூறிவிட்டா செல்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Must Read : ஒபிஎஸ்-இபிஎஸ் அணியில் இல்லாத அதிமுகவினரை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தப்போவதாக கே.சி. பழனிசாமி அறிவிப்பு

அதிமுக அலுவலகம்  சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் தான் பூட்டப்பட்டது. இதில் யாருக்கும் சாதகமாக தமிழக அரசு செயல்படவில்லை. அலுவலகம் உள்ளே பிரச்னை ஏற்பட்ட பிறகு காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் ரகுபதி  விளக்கம் அளித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, EPS, OPS, TN Govt

அடுத்த செய்தி