ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் எதற்காக சந்திக்கிறார்?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிய பிறகு சந்திக்கக்கூடிய முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

  • Share this:
ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வரும் திங்கள் கிழமை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டப்த்திற்கு வருகை தருமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிறுநீரக பரிசோதனை தொடர்பாக அமெரிக்கா சென்று வந்த நிலையில் ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில்  மக்கள் மன்றத்தின் அடுத்த கட்ட செயல்பாடு தொடர்பாக பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் அமைப்பிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிய பிறகு சந்திக்கக்கூடிய முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

குறிப்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் இணைந்து விட்டனர்.
யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்தார்.
இருந்தாலும் கூட பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தில் நீடித்து வருகின்றனர்.

Also read: ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்; சசிகலாவின் அதிரடி பிளான்!!

எனவே அவர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பேச வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

மேலும் அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக ரசிகர்களை சந்தித்து விட்டு செல்ல இருப்பதாகவும், மேலும் தான் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில்  நடிக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் இந்த கூட்டத்தில் தெரிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Esakki Raja
First published: