• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேரறிவாளன் விடுதலையில் 2 ஆண்டுகள் தாமதம் ஏன்? ஆளுநர் விரைந்து முடிவெடுக்கவேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

பேரறிவாளன் விடுதலையில் 2 ஆண்டுகள் தாமதம் ஏன்? ஆளுநர் விரைந்து முடிவெடுக்கவேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

பேரறிவாளன்.

பேரறிவாளன்.

பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதப்படுத்துகிறார் என தமிழக அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

  • Share this:
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு உள்ளிட்ட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதற்கிடையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்று 2018-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தமிழக அரசின் தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரையில் ஒப்புதல் அளிக்காமல் இருந்துவருகிறார். இந்தநிலையில், தன்னை விரைந்து விடுதலை செய்யவேண்டும் என்று பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஏன் இவ்வளவு காலதாமதப்படுத்துகிறார் எனவும் அவருக்கு தமிழக அரசு ஆலோசனை வழங்க வேண்டாமா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், இந்த வழக்கு தொடர்பாக சிபிஐயிடமிருந்து ஆளுநர் அறிக்கை கேட்டிருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சிபிஐ அறிக்கைக்கும், பேரறிவாளன் விடுதலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என தெரிவித்தனர்.

    மேலும் படிக்க...சென்னையில் வெங்காயத்தைத் தொடர்ந்து உருளைக் கிழங்கு விலையும் உயர்வு....



    இந்த விவகாரத்தில் ஆளுநர் மேலும் காலதாமதப்படுத்தாமல் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை நவம்பர் 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

    பேரறிவாளனின் தாய் அற்புதமாள்


    பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அவருடைய தாயார் அற்புதம்மாள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக சட்டப்போராட்டம் நடத்திவருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: