கொரோனா தடுப்பூசி போட்டபின் கைகள் வலிக்கக் காரணம் என்ன

தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கைவலி ஏற்படுவது பொதுவான ஒரு அறிகுறியாக இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    சாதாரண ஊசிகளை விட, தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பின், ஊசி போட்ட இடத்தில் கூடுதல் வலி மற்றும் அசௌகரியமாக இருக்கும். கோவிட்-19 தடுப்பூசியும் விதிவிலக்கல்ல. இந்த ஊசி செலுத்திக்கொண்ட பின், உங்களுக்கு கைகள் வலி மற்றும் அழற்சி மற்றும் சோர்வுக்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் ஏற்படும் வலிக்கான காரணம்?

    இயல்பாகவே, கோவிட்-19 தடுப்பூசியில், மிதமான மற்றும் ரியாக்டோஜெனிக் தன்மை கொண்ட பல பக்க விளைவுகள் உள்ளன. இதிலே, பெரும்பாலான பின்விளைவுகள் தானாகவே மறைந்து விடும். உதாரணமாக, வலி, லேசான காய்ச்சல், அழற்சி போன்றவை. ஆனால் சில நேரங்களில், இதன் தீவிரத்தின் அடிப்படையில், எப்போதாவது தொந்தரவாக மாறலாம். கையில் தீவிரமான வலி, மற்றும் புண் போன்ற பக்க விளைவுக்கு வாய்ப்பு உள்ளது.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் புண், வலி ​​அல்லது சில நேரங்களில் அழற்சி காரணமாக வீக்கம் ஏற்படலாம். ஆனால், இவை அனைத்தும், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உலகெங்கிலும் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகளில் ஒன்று என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சில நேரங்களில், இது சரியாக நீண்ட நாட்கள் ஆகலாம். அது மட்டுமின்றி, அழற்சியின் பக்க விளைவு சிலருக்கு மிகவும் தீவிரமாக இருக்கலாம். இந்த பக்க விளைவு 'COVID arm' என்று குறிப்பிடப்படுகிறது.

    ஆனால் இது உண்மையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா? இதைக் குறைப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? கூடுதல் விளக்கங்கள் இங்கே...

    ஊசி போடப்பட்ட இடத்தில் ஏற்படும் வலிக்கான காரணம்?

    ஒரு தடுப்பூசியின் பக்க விளைவுகள் பல விதமாக வெளிப்படும். பெரும்பாலும் அழற்சி மற்றும் வீக்கம் ஆகிய வடிவத்தில் காணப்படுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெரும்பாலான நபர்களுக்கு, கைகளில் வலி, அல்லது புண், விறைப்புத்தன்மை, கையை நகர்த்துவதில் மற்றும் அசைப்பதில் சிரமம் போன்றவை பொதுவான எதிர்விளைவுகளாக காணப்படுகிறது.

    சிலருக்கு, வலி மற்றும் அசௌகரியமாக உணர்வது, உணர்வின்மை போன்றவை தீவிரமாக இருந்தாலும், இவை அனைத்துமே தற்காலிகமானவை. இந்த பக்க விளைவுகள், ஒருவரை வழக்கமான செயல்களில் ஈடுபட முடியாதவாறு தடுக்கும். இதற்கான காரணம் என்னவாக் இருக்கும் என்று நீங்கள் தெரிந்து கொண்டால், ஆச்சரியமாக உணர்வீர்கள்.

    தடுப்பூசி உட்செலுத்தப்பட்ட இடத்தில் வலி மற்றும் டெண்டர்னஸ் ஆகியவை தான் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தோன்றும் முதல் பக்க விளைவுகள் ஆகும். நீங்கள் தடுப்பூசி போடும்போது ஏற்படும், மிகவும் சாதாரணமான விளைவு, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் மட்டுமே வலி இருக்கும்.

    காயம் போன்ற தன்மையை ஏற்படுத்தும் எதிர்வினை, உங்கள் உடல் முதலில் தடுப்பூசியை எவ்வாறு உணர்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. நீங்கள் ஒரு தடுப்பூசி ஷாட் பெறும்போது, ​​உடல் அதை ஒரு காயம் என்று கருதுகிறது. இரத்தப்போக்கு அல்லது வெட்டுகாயம் ஏற்பட்டால் சரி செய்யக்கூடிய நோயெதிர்ப்பு உயிரணுக்களை, உடல் உங்கள் கைக்கு அனுப்புகிறது. இது இரத்த நாளங்களை தளர்த்தும். இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, நோயெதிர்ப்பு செல்கள் வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்த வீக்கம் நாளைடவில் சரியாகிவிடும்.

    பின்னர் நீங்கள் மீண்டும் அதே நோய்க்கிருமி தொற்றுக்கு ஆளானால், உடனடியா நோயெதிர்ப்பு சக்தி உங்களை பாதுகாக்க உதவுகிறது. இதைத்தான் வல்லுநர்கள், தடுப்பூசியின் 'ரியாக்டோஜெனசிட்டி' என்று அழைக்கின்றனர். ஒரு சிலருக்கு, கையில் செலுத்தப்பட்ட சிறிய அளவிலான தடுப்பூசி திரவத்திற்கு தசைகளின் எதிர்வினையாக, சில நேரம் எரிச்சல் கூட ஏற்படுகிறது.

    காயம் தவிர, சிலருக்கு ஊசி போடப்பட்ட இடத்தின் அருகே சிவந்து போதல், எரிச்சல் மற்றும் வீக்கத்தையும் எதிர்கொள்ள நேரிடும். Covid arm, எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளுடன் தொடர்புடையது. இதனால், எரிச்சல், அரிப்பு, வீங்கிய சரும திட்டுகள் போன்றவை ஏற்படலாம்.

    வலி மற்றும் காயம் எவ்வளவு நாள் நீடிக்கும்?

    பெரும்பாலான தடுப்பூசி பக்க விளைவுகள் 2-3 நாட்கள் வரை நீடிக்கும். மேலும் கை வலி, வீக்கம் மற்றும் அழற்சி ஆகியவையும் இந்த கால அளவி நீடிக்கும். இருப்பினும், நீங்கள் அதிக வீக்கத்தை அனுபவித்தால், அல்லது அதிக வலி உணர்திறன் கொண்டவராக இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு 5 நாட்கள் வரை இந்த விளைவுகள் நீடிக்கலாம்.

    இருப்பினும், இதைச் சொல்லி, தடுப்பூசி போட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு வலி குறையவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசிப்பது செய்வது நல்லது.

    கையில் காயம் மற்றும் அழற்சி ஏற்படுவது நல்லது

    உங்கள் கை எவ்வளவு வீங்கியுள்ளது என்பது, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் ஏற்படும் காயமும், டெண்டர்னஸ் ஆகியவற்றோடு நேரடியாக தொடர்புள்ளது.

    எளிமையாகச் சொல்வதானால், உங்களுக்கு அதிக வீக்கம், கைகள் இயக்குவதில் சிரமம் மற்றும் வேதனை ஏற்படலாம்- சிலர் ஊசி போடும் இடத்தில் மற்றவர்களை விட அதிக தீவிரமான அல்லது நீண்ட கால வலியை அனுபவிப்பதற்கான காரணத்தைக் குறிக்கும்.

    இருப்பினும், பல வல்லுநர்கள் கருத்து படி, நீங்கள் தீவிரமான வேதனையையும், வலியும், சோர்வும் உணர்ந்தால், உங்கள் தடுப்பூசி செயல்படுகிறது என்று அர்த்தம். ஏற்கனவே கூறியுள்ளது போல, தடுப்பூசி உடலில் அழற்சியைத் தூண்டும் மற்றும் ஆன்டிபாடிக்களை உருவாக்கும். நீங்கள் அதிக அளவு வீக்கத்தை அனுபவித்தால், உங்கள் தடுப்பூசி அதன் பணியைச் சிறப்பாகச் செய்து, போதுமான பாதுகாப்பை வழங்குகிறது என்பதற்கான சிறந்த அறிகுறியாகும்.

    ஊசி போடப்பட்ட இடத்தை சுற்றி மட்டுமே வலி இருக்கிறதா?

    கையில் தடுப்பூசி போடப்படும் இடம் மற்றும் அதைச் சுற்றி, வீக்கம் ஏற்பட்டு, அதனால் வழியும், லேசான சோர்வும் உண்டாகும். ஒரு சிலருக்கு வலி மிகவும் லேசானதாகவும், சிலருக்கு மிகவும் அதிக அளவிலும் ஏற்பட்டு, கையை அசைக்க முடியாத நிலை கூட ஏற்படலாம். தடுப்பூசி சில நேரங்களில் தசை வழியையும் ஏற்படுத்தலாம். இந்த வலி அதிகமாகும் போது, சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் காணப்படும் அறிகுறிகள் போல தோன்றுகின்றன என்று சிலர் கூறுகிறார்கள்.

    வழியையும் சோர்வையும் நீக்க வழிகள் உள்ளதா?

    காயம் மற்றும் ஊசி போடப்பட்ட இடத்தில் ஏற்படும் சோர்வு உங்களை மிகவும் அசௌகரியமாக உணர வைக்கும். ஒரு சிலருக்கு, ஓரிரு நாட்களுக்கு கைகளை அசைக்க முடியாத தன்மை கூட ஏற்படலாம்.

    உங்கள் கை வலி, வீக்கம் மற்றும் சோர்வின் தீவிரத்தை குறைக்க, அல்லது நீக்க மற்றும் பக்க விளைவுகளிலிருந்து விரைவாக மீட்க ஒரு சில வழிகள் உள்ளன. புண் மற்றும் வீக்கத்தைக் குறைக்க ஊசி போடப்பட்ட இடத்தில் ஐஸ் பேக், சூடான / இதமான வெப்ப நீர் பயன்படுத்தி கம்ப்ரஸ் செய்வது போன்ற சிகிச்சை முறைகளை பெரும்பாலான நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எப்சம் உப்பு குளியல் எடுத்துக்கொள்வதும் வலியைக் குறைக்க உதவும்.

    வீக்கம் மற்றும் வலியை நிர்வகிக்க, வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், அவற்றை ஊசி போட்டுக்கொள்ளும் முன்னர் எடுத்துக்கொள்வது அவ்வளவு உதவியாக இருக்காது, மேலும், இதனை உண்மையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது தவிர, இந்த பக்க விளைவுகளை எதிர்த்துப் போராட வேறு சில வழிகளும் உள்ளன. கையில் ஏற்படும் விறைப்பைக் குறைக்க உடற்பயிற்சி, அடிப்படை ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகள் போன்றவை நிச்சயமாக உதவும்.
    Published by:Karthick S
    First published: