தமிழகத்தில் இ-பாஸ் ஏன் கட்டாயம்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் மூலமே கண்டறிய முடியும் என்றும் முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார்.

தமிழகத்தில் இ-பாஸ் ஏன் கட்டாயம்? முதல்வர் பழனிசாமி விளக்கம்
எடப்பாடி பழனிசாமி
  • Share this:
தொற்றாளர்களை கண்டறியவே இ-பாஸ் முறை நடைமுறையில் இருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதனை வைத்து அரசியல் செய்யவில்லை என்று திமுகவின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், கடலூர் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, 32 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 25 கோடி மதிப்பில் முடிவுற்ற 333 திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் குழுவினரையும் சந்தித்திப் பேசினார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், எதிர்க்கட்சிகளை முடக்கவே இ-பாஸ் அமலில் இருப்பதாக திமுக முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர், தொற்றாளர்களை அறிய இ-பாஸ் அவசியம் என்றார். யார் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை இ-பாஸ் மூலமே கண்டறிய முடியும் என்றும் முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார்.

அதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்திற்கு சென்று 207 கோடி மதிப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டார். பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக கூறினார். மேலும், நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா, ரெடிமேட் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.தொழில்துறையினருக்கு இருக்கும் பிரச்னைகளை தீர்க்க ஒவ்வொரு மாவட்டமாக சென்று அவர்களை சந்தித்துவருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்,
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading