அண்ணா பெயரை ஏன் குறிப்பிடவில்லை? காங்கிரஸ் உறுப்பினருக்கு துரைமுருகன் நறுக் கேள்வி!

அமைச்சர் துரைமுருகன்

அண்ணா பெயரை ஏன் குறிப்பிடவில்லை? என காங்கிரஸ் உறுப்பினருக்கு அவை முன்னவர் துரைமுருகன் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

 • Share this:
  சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஈ.வெரா திருமகன், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்த அவையில் நானும் அமர்ந்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.

  அப்போது குறிக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன்: ஓமந்தூரார் ராமசாமி, காமராஜர், கலைஞர் பெயரை குறிப்பிட்டவர், பேரறிஞர் அண்ணாவின் பெயரை எப்படி மறந்தார். அவர் மறந்து விட்டாரா அல்லது வேண்டுமென்றே தவிர்த்து விட்டாரா என கேள்வி எழுப்பினார். அண்ணாவின் பெயரை எப்படி மறக்கலாம்? அவர் மறந்திருந்தால் மன்னித்து விடலாம். வேண்டுமென்றே தவிர்த்திருந்தால் விவாதத்திற்கு உட்பட்டது என்றார்.

  அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை: கலைஞர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு திருமகன் பேசினார். கலைஞரைப் பற்றி பேசினாலே அண்ணாவைப் பற்றி பேசியதாக தானே அர்த்தம் என்றார்.

  அதற்கு பதிலளித்த துரைமுருகன்: செல்வப்பெருந்தகை பற்றி பேசினால் காமராஜரைப் பற்றி பேசியதாக அர்த்தம் கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

  Also read: எதிர்க்கட்சித் தலைவரை விவாதத்திற்கு அழைத்த முதல்வர் - கராசார விவாதத்தை, முடித்து வைத்த சபாநாயகர்!

  இதைத்தொடர்ந்து, பேசிய திருமகன்: பேரறிஞர் அண்ணாவின் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. நான் மறந்து அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன் என்று கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: