• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டாலினை பார்த்து திருமாவளவன் கேள்வி கேட்காமல், பதுங்குவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

ஸ்டாலினை பார்த்து திருமாவளவன் கேள்வி கேட்காமல், பதுங்குவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

ஸ்டாலினை பார்த்து திருமாவளவன் கேள்வி கேட்காமல், பதுங்குவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

ஸ்டாலினை பார்த்து திருமாவளவன் கேள்வி கேட்காமல், பதுங்குவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படும் போது, ஸ்டாலினை பார்த்து திருமாவளவன் கேள்வி கேட்காமல், பதுங்குவது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அதே வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் 46வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    கூட்டணிக் கட்சியான விசிகவுக்கே இந்த நிலைமை எனவும், அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    முதல்வர் அனுமதி அளித்தால் தான், அனுமதி கிடைக்கும் என்கிற போது எய்தவன் இருக்க அம்பை குறை செய்வது போல, ஸ்டாலினை விடுத்து காவல்துறையை கருப்பு ஆடு என திருமா விமர்சிப்பது என்ன நியாயம்? வீரம் செறிந்த திருமாவின் வீரம் எங்கே போனது என கேள்வி எழுப்பினார்.

    முதல்வர் ஸ்டாலினின் திடீர் ஆய்வுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திடீர் விசிட்களால் பிரயோஜனமாக என்ன நடந்துள்ளது. பென்னாகரத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட போது, மாணவர்களுக்கு தினமும் முறைப்படி வழங்க வேண்டிய பொரியல் இல்லை என தெரிந்தும், அதைப்பற்றி எதுவும் கேட்காமல் வணக்கம் கூறி சென்று விட்டதாக விமர்சித்தார்.

    கொள்கை விளக்க குறிப்பேட்டில் மதிய உணவு திட்டத்தில் சாதம், சாம்பார், ரசம், பொறியல் என உள்ள போது, பொறியல் இல்லாததற்கு யார் காரணம், அப்படி என்றால் அந்த துறை எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் போவதன் பெயர் தான் ஆய்வா என கேள்வி எழுப்பினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: