முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரஜினியை சந்தித்தது ஏன்? சசிகலா தரப்பில் விளக்கம்

ரஜினியை சந்தித்தது ஏன்? சசிகலா தரப்பில் விளக்கம்

சசிகலா - ரஜினிகாந்த் சந்திப்பு

சசிகலா - ரஜினிகாந்த் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தது ஏன் என்று சசிகலா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். அதனையடுத்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தீவிர பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனையடுத்து, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.கவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அ.தி.மு.கவை மீட்பேன் என்று கூறிவருகிறார். இந்தநிலையில், போயஸ் தோட்டத்திலுள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்துக்கு சென்று அவரையும் அவரது மனைவி லதாவை சந்தித்து பேசியுள்ளார் சசிகலா. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சசிகலா தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : அடுத்த 10 அமாவாசைக்குள் அதிமுக மீண்டும் அரியணை ஏறும்- பொள்ளாச்சி ஜெயராமன்

சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், சசிகலா நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்கள். ரஜினிகாந்த் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனை பற்றியும் கேட்டு அறிந்தார்.

மேலும் ரஜினிகாந்தின் அவர்கள் கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் சசிகலா தெரிவித்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Rajinikanth, Sasikala