ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குரூப் 2 ரிசல்ட் தாமதம் ஏன்? - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

குரூப் 2 ரிசல்ட் தாமதம் ஏன்? - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

Group 2 Result | சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், அப்பணி நிறைவுற்ற பின்னர் குரூப் 2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 2 தேர்வுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

    இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதையும் படிங்க : கோவையில் பந்த்-க்கு அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை- நீதிமன்றத்தில் பாஜக விளக்கம்

    இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் குரூப் 2 தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக  சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in  என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Karthi K
    First published:

    Tags: Tamilnadu, TNPSC