கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது ஏன்? : ஸ்டாலின் கேள்வி

மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியில் கலைஞர் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைந்ததாகவும். அதிமுக அரசு தங்களது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப்படும் என்று சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

 • Share this:
  கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்று கூறிய மத்திய அரசு தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது ஏன். பெட்ரோல், டீசல் மீதான மத்திய மாநில அரசின் வரியின் காரணமாக தான் விலை அதிகரித்து உள்ளது. 7 ஆண்டுகளுக்கு பின்பும் பாரதிய ஜனதா அரசு முந்தைய ஆட்சியை குறை கூறி வருகிறது, அதிமுக அரசு தங்களது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கபடும் என்று தேர்தல் அறிக்கையில் சேர்த்து கொள்ள வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள டிஎண் பாளையத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று நெசவாளர், விளையாட்டு வீரர்கள், கவிஞர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வையும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க கோரி கண்டன முழக்கம் எழுப்பினார். இதனை தொடர்ந்து மாவட்டத்தின் குறைகளை எடுத்து கூறும் குறும்படம் வெளியிட்டார்.

  பின்னர் பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்று அதன் மீது உள்ள பிரச்சினை குறித்து பொதுமக்களுடன் பேசி பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். ஆசிரியர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் திமுக ஆட்சியில் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறினார். 3- மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என்றும் அப்போது முதல் 100- நாட்கள் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

  மத்திய அரசு பொதுமக்களுக்கு தினமும் சாட்டையடி தண்டனை வழங்கி வருவதாகவும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்று மத்திய அரசு கூறி வந்தது. தற்போது கச்சா எஃகு விலை குறைந்து உள்ள போதும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து உள்ளது.இதற்கு காரணம் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியே காரணம் என்றும். திமுக ஆட்சியில் கலைஞர் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைந்ததாகவும். அதிமுக அரசு தங்களது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப்படும் என்று சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

  அசாம், கேரளா போன்ற மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைத்துள்ளதாகவும் கூறிய ஸ்டாலின் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் காரணமாக பேருந்து கட்டணம், உணவு,மளிகை பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்படும் நிலை உள்ளது என்றும் கூறினார். அதிமுக அரசுக்கு திடீர் என்று அருந்ததியினர் சமூகத்தின் மீது அக்கறை வந்துள்ளது என்றும் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தான் ஏற்கனவே அறிவித்ததாகவும் கூறினார்.

  அருந்ததியினருக்கு கல்வி வேலை வாய்ப்பில்லை இட ஒதுக்கீடு பெற்று தந்தது திமுக அரசு தான் என்றும்.அதிமுக அமைச்சர் தங்கமணி தொகுதிக்கு மட்டும் அதிக நிதிகள் கொடுக்கப்பட்டது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார்.
  Published by:Arun
  First published: