மொத்த வியாபாரிகள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதால் பாதிப்பு - வேதனையில் சில்லறை வியாபாரிகள்

மொத்த வியாபாரிகள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதால் பாதிப்பு - வேதனையில் சில்லறை வியாபாரிகள்

கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபாரிகள் சில்லறை வர்த்தகம் செய்வதால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சிறு மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • Share this:
கோயம்பேடு சந்தையில் சில்லரை வியாபாரிகளுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் மொத்த வியாபாரிகளிடம் குவிந்து வருகின்றனர். இந்தியா முழுவதும் 2வது கொரோனா பரவல் அச்சம் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை வியாபாரம் செய்யும் பகுதிகளில் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலையில் இருந்து  மொத்த வியாபாரம் செய்யும் பகுதிகளில் ஏராளமான பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் குவிந்து தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கும் சூழல் நிலவியது.

விதிகளை மீறி மொத்த வியாபாரிகள் சரக்கு வாகனங்களை சந்தைகளுக்கு எடுத்துச் சென்று பொதுமக்களிடம் சில்லரை வியாபாரம் செய்வதாகவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு அரசு அதிகாரிகளும் மொத்த வியாபாரிகளுக்கு துணை போவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் கோயம்பேடு சந்தைக்குள்ளும் அதை ஒட்டியுள்ள சாலைகளும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு முழுமையாக இயங்கினால் தான் மக்கள் ஒரே இடத்தில் பொருட்களை வாங்காமல் பரவலாக வாங்கி செல்ல இயலும். எனவே அனைத்து கடைகளுக்கும் அனுமதி கிடைக்க வேண்டும்.

தங்கள் கோரிக்கைகளை கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அதிகாரி மூலமாக தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாகவும் அதுகுறித்து இன்று முதல்வருடன் ஆலோசனை நடைபெறும் உள்ளதாகவும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனவும் சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: