Home /News /tamil-nadu /

திமுக குடும்பத்தை யார் விமர்சித்தாலும் குண்டர் சட்டம் பாய்கிறது- காயத்ரி ரகுராம்

திமுக குடும்பத்தை யார் விமர்சித்தாலும் குண்டர் சட்டம் பாய்கிறது- காயத்ரி ரகுராம்

Gayathri Raghuram

Gayathri Raghuram

கடந்த ஆட்சியில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது என்னென்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என பாஜகவின் காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.

    திமுக குடும்பத்தை யார் விமர்சித்து பேசினாலும் தற்போதைய சூழலில் உடனடியாக அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்வதாக பாஜகவின் காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்திற்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், ‘கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ள நிலையில் திமுக அரசு மதுபானக் கடைகளைத் திறந்து வைத்துள்ளது. முஸ்லிம், கிறிஸ்துவ மத விழாக்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவாதா? ஆனால் இந்து மத விழாக்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் கேள்வி எழுப்பினார்.

    கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    Also read:  பாதாள அறையில் பெண்கள்.. கமலின் ‘பாபநாசம்’ பட பாணியில் போலீசுக்கே தண்ணி காட்டிய சம்பவம்

    டிஜிபி சைலேந்திரபாபு மக்கள் பிரச்சினைகளை கேட்டு அறியாமல் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறார். மாரிதாஸை கைது செய்யும் அளவிற்கு என்ன தவறு செய்தார்?

    திமுக குடும்பத்தை யார் பேசினாலும் தற்போதைய சூழலில் உடனடியாக அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்வதாகவும், கடந்த ஆட்சியில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது என்னென்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் அப்படிப் பார்க்கப் போனால் ஒட்டுமொத்த திமுக குடும்பமும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளே போக வேண்டும், எனவே தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
    Published by:Arun
    First published:

    Tags: BJP

    அடுத்த செய்தி