ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முக்கிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை கைப்பற்றப்போவது யார்? தி.மு.க கவுன்சிலர்களில் யாருக்கு வாய்ப்பு

முக்கிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை கைப்பற்றப்போவது யார்? தி.மு.க கவுன்சிலர்களில் யாருக்கு வாய்ப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை யார் கைப்பற்றவுள்ளார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், நூற்றாண்டு பாரம்பரியமிக்க சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளின் மேயர் பதவியை அலங்கரிக்க யார் யாருக்கு வாய்ப்புள்ளது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

  தலைநகர் சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் தி.மு.க 153 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதில், பட்டியல் இனத்தை சேர்ந்த 18 பெண்கள் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

  வட சென்னை பகுதியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் பகுதியிலுள்ள 70-வது வார்டில் போட்டியிட்ட ஸ்ரீதணி அல்லது திருவிக நகர் 74-வது வார்டில் போட்டியிட்ட ஆர்.பிரியா ஆகிய இருவரில் ஒருவருக்கு மேயர் பதவியை பெற அமைச்சர் சேகர்பாபு காய் நகர்த்தி வருகிறார். அவருக்கு போட்டியாக வேளச்சேரி பகுதியில் வரக்கூடிய 180-வது பொது வார்டில் போட்டியிட்ட விசாலாட்சி துரை கபிலனுக்கு மேயர் பதவியை வாங்கி விட தீவிரமாக பணியாற்றி வருகிறார் அப்பகுதியின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா சுப்பிரமணியன்.

  இதேபோன்று மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கு நான்கு பெண் கவுன்சிலர்கள் போட்டியில் உள்ளனர். வார்டு 17-ல் வெற்றி பெற்றுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசுவின் நெருங்கிய உறவினரும், தி.மு.க பகுதி செயலாளர் பொம்மதேவனின் மகளான ரோகிணி இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 32-வது வார்டில் வெற்றிபெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கத்தின் மருமகளான விஜய மவுசிமியும் மேயர் ஆகும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

  வார்டு எண் ஐந்தில் வென்றுள்ள அமைச்சர் மூர்த்தியின் தீவிர ஆதரவாளர் சசிகுமார் என்பவரின் மனைவி வாசுகி மற்றும் வார்டு 60-ல் வென்றுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நெருங்கிய ஆதரவாளர் பாமா முருகனும் மேயர் போட்டியில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேயருக்கான போட்டியில் மூன்று பேர் முன்னிலையில் உள்ளனர்.

  மூன்றாவது பெரிய கட்சி யார்? காங்கிரஸ், பாஜக வாதம்- மாவட்ட வாரியாக உண்மை நிலவரம் என்ன?

  அதில் முதலில் உள்ள 52 வது வார்டு உறுப்பினர் லட்சுமி இளஞ்செல்வி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கின் மனைவி ஆவார். அதேபோல, கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதியின் மகளான நிவேதா மற்றும் 46-வது வார்டில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள மீனா லோகு ஆகியோருக்கும் மேயர் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை, 15-வது வார்டில் வெற்றி பெற்றவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவருமான உமாராணி மேயர் பதவிக்கான ரேஸில் உள்ளார். இதேபோன்று 2-வது வார்டில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம், முன்னாள் துணை மேயராக பதவி வகித்து அனுபவம் கொண்டவர். மேலும், 26 வது வார்டில் வெற்றிபெற்ற கலையமுதனும் மேயர் பதவிக்கு காய்களை நகர்த்தி வருகிறார். கடந்த முறை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோல்வியுற்றார், என்பதால் இவருக்குப் மேயர் ஆவதற்கு அதிக தகுதி உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகனுக்கு மேயராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 27-வது வார்டில் களமிறங்கிய இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ததுடன், தொடர்ந்து 5 முறையாக கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். ஏற்கெனவே, 2 முறை துணை மேயராக இருந்த அன்பழகனுக்கு இந்த முறை மேயர் பதவியை பெற்றுத்தர முதலமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.

  தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி தலைமை வலியுறுத்தி வருகிறது.

  Published by:Karthick S
  First published:

  Tags: DMK, Local Body Election 2022