கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளி கனகராஜை கொலை செய்யச் சொன்னது யார்? கொலைக்காக மூளைச் சலவை செய்யப்பட்ட
கோவையைச் சேர்ந்தவர் யார்? என்பது போன்ற பல்வேறு புதிய தகவல்கள் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கின்றன.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திபு மூன்றாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருடன் சந்தோஷ்சாமியும் குற்றவாளியாக இருக்கக்கூடிய நிலையில், திபு மற்றும் சந்தோஷ்சாமியுடன் நியூஸ் 18 செய்தியாளர் ரகுவரன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, A3 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திபு கூறுகையில், கனகராஜ் கூப்பிட்டதால் அங்கே சென்றதாகவும், அப்போது அது கோடநாடு எஸ்டேட் என்று தனக்குத் தெரியாது எனவும் கூறினார்.
அங்கே எம்.எல்.ஏ குடோன் இருக்கிறது என்றும், அங்கே நிறைய பணம் இருக்கிறது என்றும் கூறி அழைத்துச் சென்றார் கனகராஜ். நீங்கள் கேரளாக காரர் உங்களுக்கு பயம் இருக்காது என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார். கனகராஜ் முதலில் உள்ளே சென்றார். நாங்கள் அவரைத் தொடர்ந்து சென்றோம். கனகராஜ் முகத்தில் மாஸ்க் எதுவும் அணிந்திருக்கவில்லை. நாங்கள் மாஸ்க், கையுரை அணிந்து சென்றோம். திரும்பி வரும்போது அவர் பேப்பர் உள்ளிட்ட பல்வேறு ஆவனங்களை எடுத்து வந்தார் என்று கூறினார்.
இந்நிலையில், சந்தோஷ்சாமி கூறுகையில், கைது செய்யப்பட்ட இரவன்று போலீசாருன் மூன்று கார்களில் சில நபர்களும் வந்திருந்ததாக கூறினார். அப்போது சஜிவன் சகோதரர் செபி உடன் இருந்தார். அப்போது செபி, கனகராஜை கொலை செய்யச்சொலில் கோயம்புத்தூரில் இருந்தவருடன் போனில் பேசியதாகக் கூறினார். கனகராஜ் சேலத்தில் ஒரு விருந்தில் இருப்பதாகக் கூறி, அவரை கொலை செய்யச் சொன்னார்கள் என்றும் கூறினார் சந்தோஷ்சாமி.
Must Read : சசிகலாவை தியாகத்தலைவி என்று அழைக்கக் கூடாது - ஜெயலலிதாவின் உதவியாளர்
அவரை கொலை செய்யச் சொன்ன மறுநாளே கனகராஜ் இறந்துபோனார் என்றும் சந்தோஷ்சாமி கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.