சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு அளிப்பது? இளைஞரின் கேள்விக்கு சத்குரு பதில்

சத்குரு

காவேரி நீர் பங்கீட்டில் 3 மாநிலங்களும் ஒன்றினைந்து அறிவியல் பூர்வமாக குழு அமைத்து தண்ணீர் சேமிப்பு நடவடிக்கை கொண்டு வர வேண்டும்.

 • Share this:
  கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பாக மாட்டு பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து உழவுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி கூறினார்.

  ஈஷா யோகா மையத்தில் வளர்க்கப்படும் காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட பல்வேறு ரக நாட்டு மாடுகள் மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியாக நிறுத்தப்பட்டு இருந்தன.

  பொங்கல் இடுதலை தொடர்ந்தது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் சத்குருவின் சிறப்பு சத்சங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு அளிப்பது என்று கேள்வி எழுப்பினார்.

  அதற்கு, காவேரி நீர் பங்கீட்டில் 3 மாநிலங்களும் ஒன்றினைந்து அறிவியல் பூர்வமாக குழு அமைத்து தண்ணீர் சேமிப்பு நடவடிக்கை கொண்டு வர வேண்டும். தண்ணீர் வெள்ளமாக ஒடி வரக்கூடாது, நடந்து வர வேண்டும். காவேரி நீர் பங்கீட்டில் சண்டை, சச்சரவு இல்லாமல் அறிவியல் பூர்வமாக 3 மாநில அரசும் பங்கீட்டு செய்ய அறிவியல் பூர்வமாக குழு அமைத்து நடவடிக்கை எடுப்பவர்களை ஆதரிப்பேன் என்றார்.

  மேலும் நிறைய பள்ளிகள் மாட்டு சாலைகள் போன்று உள்ளது. அரசாங்கம் பள்ளியை நடத்துவதற்கு பதில், தனியார் பள்ளிகளை நடத்த வேண்டும். அப்படி, பள்ளியை நடத்தும் தனியாரிடம், வசதி இல்லாத மாணவர்களுக்கான பணத்தை அரசாங்கம் கட்ட வேண்டும் என்றும் சத்குரு தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: