ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தை நெருங்கும் ‘மாண்டஸ்’... புயலுக்கு இந்த பெயர் வைக்க காரணம் தெரியுமா?

தமிழகத்தை நெருங்கும் ‘மாண்டஸ்’... புயலுக்கு இந்த பெயர் வைக்க காரணம் தெரியுமா?

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

Cyclone Mandous : புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது, அது எப்போது தொடங்கப்பட்டது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றதையடுத்து, அதற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது. இந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதுமே புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்கப்பட்டது, 2004ஆம் ஆண்டு தான். ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும் நிலையில், எந்த புயல், எந்த திசையில் வருகிறது என்பதை அறிவதற்காகவே, அவற்றுக்கு பெயர்கள் சூட்டப்படுகின்றன.

அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பில், அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 191. இந்த நாடுகளை 7 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பு ( World Meteorological Organization) பெயரிட்டுள்ளது,

இதையும் படிங்க : ஒக்கி, கஜா, மாண்டஸ்.... புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது தெரியுமா?

இதில் வங்கக்கடல் மற்றும் அபிக்கடல் உள்பட இந்திய பெருங்கடல்  பகுதிகளில் உருவாகும் வெப்ப மண்டல புயல்களை அடையா ளப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் ஆசியா பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் (இ.எஸ்.சி.ஏ.பி.) உறுப்பினர்களாக இருக்கும் வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், மியான்மர் ஆகிய 13 நாடுகள் பெயர்களை தேர்வு செய்து வழங்கியிருக்கின்றன.

அந்தவகையில் ஒவ்வொரு நாடும் தலா 13 பெயர்கள் வீதம் மொத்தம் 169 பெயர்கள் உலக வானிலை அமைப்பிடம் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் சுழற்சி முறையில் பெயர்கள் புயல்களுக்கு சூட்டப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை கூண்டுகள்... துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம்?

இந்தநிலையில் வங்கக்கடலில் நேற்று உருவான புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே தேர்வு செய்து வழங்கியிருந்த 'மாண்டஸ்' என்ற பெயரை இந்திய வானிலை ஆய்வு மையம் சூட்டியிருக்கிறது. இதற்கு அரபு மொழியில் 'புதையல் பெட்டி'(டிரெசர் பாக்ஸ்) என்று பொருள்.

இதனைத் தொடர்ந்து அடுத்து உருவாக கூடிய புயலுக்கு ’மேகா’ என்ற என்ற பெயரை ஏமன் நாடு ஏற்கனவே பரிந்துரைத்து இருக்கிறது. 'மாண்டஸ்' புயலுக்கு முன்பு 'சிட்ராங்'புயல் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி வங்காளதேசத்தில் டின்கோனா தீவு-சான்ட் விப் இடையே கரையை கடந்தது. இந்த சிட்ராங் பெயரை தாய்லாந்து நாடு பரிந்துரைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cyclone, Cyclone Mandous