• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் - யாருக்கு வாய்ப்பு?

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் - யாருக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சமீபத்தில் கேரளா மற்றும் தெலுங்கானா மாநில தலைவர்கள் மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு தலைவர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  • Share this:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் பதவிக்கு, கட்சியின் முன்னணி தலைவர்கள் பலரும் போட்டிபோட தொடங்கி உள்ளனர். யாரெல்லாம் போட்டியில் உள்ளனர்? யாருக்கெல்லாம் வாய்ப்பு உள்ளது?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை  மாநில தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். தலைவரின் செயல்பாடுகளுக்கு ஏற்ப டெல்லி தலைமை முடிவு செய்யும்.

Also Read: ஜி.எஸ்.டி மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் – போலீசாரிடமிருந்து தப்பி ஓட்டம்!

இந்நிலையில், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தாயாராக தொடங்கி உள்ளது. சமீபத்தில் கேரளா மற்றும் தெலுங்கானா மாநில தலைவர்கள் மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு தலைவர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் டெல்லி தலைமையை நாடத்தொடங்கி உள்ளனர். தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லக்குமார், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத், மாணிக் தாகூர் என பலரும் போட்டி போடுகின்றனர். இதில், செல்லக்குமார், ஜோதிமணி ஆகியோருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read:   ‘ட்விட்டர் பறவை’யை பொறித்து டெல்லிக்கு பார்சலில் அனுப்பிய காங்கிரஸ் தொண்டர்கள் – வீடியோ!

செல்லக்குமார், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராகவும் உள்ளார். ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பதால் செல்லக்குமாருக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு ஆதரவு அளிக்கின்றனர். ராகுல் காந்தியின் நன்மதிப்பையும் பெற்றவர் ஜோதிமணி. எனவே, ஜோதிமணிக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருப்பினும், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 10 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு 9 மக்களவை தொகுதிகளிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 25 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 18 தொகுதிகளையும் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. தற்போது 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலும் பணிகள் நடந்து வருவதால் இன்னும் சில மாதங்கள் மாநில தலைவரை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: