யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர்.காந்தி யார்? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் முருகன் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழாவையொட்டி அங்கு தேர் வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் சென்று இருந்தார், அப்போது அவருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலில் அமைச்சர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்க சென்றபோது பாஜகவின் திட்டமிட்டு அமைச்சரை அவமானப்படுத்தும் நோக்கில் இப்படி நடந்து கொண்டதாக ஆளும் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, இந்து ஆலயங்கள், இந்து கடவுளை வணங்காதவர்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து திமுக அரசு அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நிகழ்சிகளை துவங்கி வைப்பது உட்பட பல செயல்களை செயல்படுத்தி வருகிறது. இது வருந்தத்தகுந்த செயலாக உள்ளது. இப்படிபட்ட நிகழ்வுகள் நடக்காமல் பார்த்து கொள்ள பாஜக கேட்டு கொள்கிறது.
இந்து ஆலய நிகழ்ச்சிகளில் இந்து நம்பிக்கை, இறைநம்பிக்கை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் வந்துதான் கோயில் நிகழ்சிகளைத் துவங்க வேண்டும் என்றால் இந்து அமைச்சர்களை அனுப்பினால் பாஜக வரவேற்கும். அதற்கு அறநிலைய துறை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிக இந்து அமைச்சர்கள் உள்ளனர்’ என்று தெரிவித்திருந்தார். அவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எம்.ஆர்.காந்திக்கு அமைச்சர் கோவிலுக்குள் வர கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர்.காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்? பொதுமக்களே கோவிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத்துறையும் அரசாங்கமும் ஒன்று தான் என்று கூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர்.காந்திக்கு அமைச்சர் கோவிலுக்குள் வர கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது?
மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள் தான் பாஜகவினர். திமுகவினர் எல்லா மதங்களையும் மதிக்ககூடியவர்கள். ஆன்மிகத்தை மத வெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் பாஜகவினர்.
பஜாகவினருக்கு ஆன்மிகம் பற்றி படிக்க ஆசையிருந்தால் என்னிடம் வரட்டும் நான் கற்று கொடுக்கிறேன். 5/5
1996-ம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த காலத்திலிருந்தே பல கோவில் விழாக்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டு வருகிறேன். குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் கோவில்களில் ரூ.50 கோடிக்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன, இதனை பாஜகவினரால் பொறுத்து கொள்ள முடியவில்லையா?
பிரிவினைவாத அரசியல் செய்ய முயலும் பாஜகவை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர். மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நன்றி அறிவித்தல் நிகழ்ச்சிக்கு முறைப்படி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும், சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.
மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள் தான் பாஜகவினர். திமுகவினர் எல்லா மதங்களையும் மதிக்ககூடியவர்கள். ஆன்மிகத்தை மத வெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் பாஜகவினர். பாஜகவினருக்கு ஆன்மிகம் பற்றி படிக்க ஆசையிருந்தால் என்னிடம் வரட்டும் நான் கற்று கொடுக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.