யார் இந்த ’பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’...?

சாத்தான்குளம் விவகாரத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த ’பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’...?
பிரன்ஸ்ட் ஆப் போலீஸ்
  • News18
  • Last Updated: July 6, 2020, 10:56 AM IST
  • Share this:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1993-ம் ஆண்டில் அப்போது எஸ்.பி.யாக இருந்த பிரதீப் வி.பிலிப் என்பவரால் 'பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' அமைப்பு தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை இந்த அமைப்பில் சேர்த்த அவர், குற்றச் செயல்களைத் தடுக்கவும், குற்றச் செயல்கள் குறித்த தகவல்களை பெறவும் அவர்களை பயன்படுத்தினார்.

தற்போது தமிழகம் முழுவதும் பரவியுள்ள இந்த அமைப்பில் ஏராளமான தன்னார்வ இளைஞர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். குற்றச் செயல்களைத் தடுப்பது, குற்றச் செயல்கள் நடைபெறும் இடங்கள் குறித்து போலீசுக்கு தெரிவிப்பது போன்றவையே இவர்களது முக்கிய பணியாகும்.

மேலும், போக்குவரத்தை சீர் செய்ய உதவுதல், திருவிழா, அரசியல் கூட்டங்களின் போது போலீசுக்கு உதவுதல் போன்றவற்றையும் இவர்கள் செய்து வந்தனர். போலீசுடன் இணைந்து பணியாற்றினாலும், அதை வைத்துக் கொண்டு சட்ட விரோத காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றும், நாட்டுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் விதி உள்ளது.


அத்துடன், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, மக்களை மிரட்டும் வகையில் ஈடுபடுவது, நிதி திரட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பகுதியிலும் எழும் சட்ட ரீதியிலான பிரச்னைகளை போலீசுக்கு தெரிவித்து, அப்பகுதி மக்களுக்கு உதவுவதே பிரண்ட்ஸ் ஆஃப் போலீசின் முக்கிய பணியாக இருக்கும் நிலையில், சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களை போலீசுக்கு போட்டுக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.




படிக்க: சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்வு - என்னென்ன இயங்கும்...?படிக்க: சீன அதிபருக்கு சொந்த கட்சியிலேயே உருவான சவால்கள்









இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசுடன் சேர்ந்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் பரவலாக குரல்கள் ஒலித்தன.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், திருச்சி சரகத்திலும் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு முழுவதும் தடை விதிக்கவில்லை என்றும், வேறு தன்னார்வலர்கள் முன்வந்தாலும் பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு போலீசார் முழுமையான பாதுகாப்பை வழங்க, தன்னார்வலர்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

 
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading