அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1000 கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை ஜனவரி 02, 2023 அன்று சென்னையிலும் அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 பொங்கல் பரிசு பணத்தை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெற முடியும். சர்க்கரை அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை PHH, PHH-AAY, NPHH, NPHH-S,NPHH-NC
PHH - Priority Household
PHH - AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana)
NPHH - Non Priority Household
NPHH-S- Sugar
NPHH-NC - No Commodity
இதில், PHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு அரிசி, உட்பட அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.
PHH-AAY என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இந்த ரேஷன் கார்டுக்கு 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். NPHH-NC ரேஷன் அட்டைதார்களுக்கு எந்த பொருளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேலே குறிப்பிட்டுள்ள 3 வகையான PHH, PHH-AAY, NPHH அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Pongal, Pongal 2023, Pongal Gift