கடவுளை நம்புகிறவர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

ஏற்கெனவே வெற்றி பெற்ற மாணிக் தாகூர் 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்தவர். பத்தாண்டுகளாக இந்தியாவிலிருந்து எதுவுமே செய்யாதவர். இனிமேல் என்ன செய்யப் போகிறார்.

கடவுளை நம்புகிறவர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை
பிரேமலதா விஜயகாந்த்
  • News18
  • Last Updated: April 12, 2019, 9:47 PM IST
  • Share this:
கடவுளே இல்லை என்று சொல்லும் கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு, கடவுளே எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று புலம்பக் கூடாது என்று பிரமேலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். 

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்தில் தேவர் சிலை அருகே தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், ‘தே.மு.தி.க இணைந்துள்ள கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி. இந்தக் கூட்டணி தான் ராசியான கூட்டணி. தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி விஜயகாந்தின் மனதில் இடம்பிடித்த வேட்பாளர். அவரை வெற்றி பெறவைத்தால் விருதுநகர் தொகுதியில் அனைத்து திட்டங்களையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.


குறிப்பாக திருமங்கலத்தில் நிலுவையில் இருக்கும் ரயில்வே பாலத்தை உடனடியாக கட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யவும், அரசு மருத்துவமனையை விரைந்து அமைக்கவும் உறுதியாக நடவடிக்கை எடுப்பார். ஏற்கெனவே வெற்றி பெற்ற மாணிக் தாகூர் 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்தவர். பத்தாண்டுகளாக இந்தியாவிலிருந்து எதுவுமே செய்யாதவர். இனிமேல் என்ன செய்யப் போகிறார்.

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது உறவினர்கள் வீட்டிலும் தி.மு.ககாரர்கள் வீட்டிலும் கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டது. விஜயகாந்தையும் தே.மு.தி.கவையும் அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

இதை பார்க்கும்போது அலிபாபாவும் 40 திருடர்களும் போட்டியிடுவார்கள் என்று தோன்றுகிறது. அலிபாபா யார் என்பதும் நாற்பது திருடர்கள் யார் என்பதும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். எங்களுடைய கூட்டணி கடவுளை நம்புகிற கூட்டணி. ஆனால் கடவுளே இல்லை என்று சொல்லும் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு கடவுளே எங்களுக்கு எதுவுமே செய்யவில்லையே? என நாளைக்கு யாரும் புலம்பக்கூடாது. கவலைப்படக்கூடாது.கடவுளை நம்புவோர் எனக்கு வாக்களியுங்கள். கடவுள் துணையோடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தே.மு.தி.க வேட்பாளருக்கு வெற்றி சின்னம் ஒண்ணாவது சின்னமாக இருப்பதால் சின்னத்தில் அழுத்தி மிகப்பெரிய வெற்றியை வாங்கி தரவேண்டும்’ என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்