பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் வெள்ளை அறிக்கை - அமைச்சர் பிடிஆர்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 400 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.

 • Share this:
  பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

  பின்னர் செய்தியாளர்களிடம பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசு வைத்திருக்கும் PM CARE இணையதளத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை என்றும், , அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 400 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.

  Also Read : கொரோனா 2-வது அலைக்கு பிறகு கட்டுப்பாடு பகுதிகள் இல்லாத இரண்டு மாவட்டங்கள்

  பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். இந்த ஆண்டு இ - பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாகவும், அரசின் அனைத்து பணிகளையும், 100 சதவீதம் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: