10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்! அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றத் தலைவர்கள் விவரம்

மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பியிருந்தது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னையிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பத்து சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.

  பொருளாதார நிலையில் பின்னடைந்த நிலையில் உள்ள உயர் சாதிப் பிரிவினருக்கு அரசுக் கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்பிலும் 10% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.

  கமல்ஹாசன்


  மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்துகட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார்.

  சீமான்


  அதனடிப்படையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னையிலுள்ள நாமக்கல் கவிஞர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. இந்தநிலையில், 21 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன. தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், தி.க சார்பில் கீ.விரமணி, மார்க்ஸிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், நாம் தமிழர் சார்பில் சீமான், காங்கிரஸ் சார்பில் கோபன்னா, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஞான தேசிகன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன்,  முஸ்லீம் லீக் சார்பில் அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

  Also see:

  Published by:Karthick S
  First published: