ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மூன்றாவது பெரிய கட்சி யார்? காங்கிரஸ், பாஜக வாதம்- மாவட்ட வாரியாக உண்மை நிலவரம் என்ன?

மூன்றாவது பெரிய கட்சி யார்? காங்கிரஸ், பாஜக வாதம்- மாவட்ட வாரியாக உண்மை நிலவரம் என்ன?

காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ் நாட்டில் பா.ஜ.க 22 மாநகராட்சி, 56 நகராட்சி, 230 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் நாகர்கோவில் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 12 வார்டுகளில் வென்றுள்ளது. ஆனால் நாகர்கோவில் மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றி இருக்கிறது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது தனித்து நின்று தலைவர் பதவியை பா.ஜ.க கைப்பற்றிய காலமும் இருந்தது. இப்போது நாகர்கோவில் எனும் கோட்டையையும் பா.ஜ.க பறிகொடுத்திருக்கிறது.

  கன்னியாகுமரி மாவட்டத்திலேயே கொல்லங்கோடு, குளச்சல், குழித்துறை நகராட்சிகளிலும் கணிசமான இடங்களைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க. இதனைத்தாண்டி கடையநல்லூர், செங்கோட்டை நகராட்சிகளில் தான் பா.ஜ.க சில இடங்களை கைப்பற்றி இருக்கிறது. 2011 -ல் பா.ஜ.க 185 பேரூராட்சி இடங்களில் வென்றிருந்தது. தற்போது இது 230- வார்டுகளாக அதிகரித்துள்ளது. இதில் வெற்றி பெற்ற 180 பேரூராட்சி வார்டுகள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவை.

  40 ஆண்டு காலமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்ளே குடியிருந்து வரும் பா.ஜ.கவால் தமிழ் நாட்டின் இதர பகுதிகளில் கால்பதிக்கவே முடியவில்லை. கோவை, திருப்பூர், பல்லடம் போன்ற இடங்களில் வலிமையானதாக கருதப்படும் பா.ஜ.கவால் கணிசமான வெற்றியை சுவைக்க முடியவில்லை. கோவையில் ஒரே ஒரு வார்டிலும், திருப்பூரில் 3 வார்டுகளிலும் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் 10 மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் போட்டியிட்டு ஒரே ஒரு வார்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

  மதுரையில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்தை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடம் பிடித்த பா.ஜ.க

  காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை 73 மாநகராட்சி, 151 நகராட்சி, 368 பேரூராட்சி வார்டுகள் என மொத்தமாக 592 வார்டுகளில் வென்றுள்ளது. 2011- ஆம் ஆண்டில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் மாநகராட்சியில், 2.07 சதவிகித வெற்றியை பதிவு செய்திருந்து. தற்போது இது, 59.32 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாஜகவோ 2011- ஆம் தேர்தலை விட கூடுதலாக 0.7 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: BJP, Congress, Local Body Election 2022