தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு ரோம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், இன்று புனிதர் பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வாட்டிகன் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் பாடல் என அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டிருந்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்தார்.
அத்துடன், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது ட்விட்டர் பதிவில், எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என்று பதிவிட்டிருந்தார். எனினும், அத்தோடு அவர் புதிதாக தமிழ்த்தாயின் ஒரு ஓவியத்தை பதிவிட்டிருந்தார்.
ஏற்கனவே, தமிழணங்கு' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த தமிழ்த்தாயின் ஓவியம் பல்வேறான விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த அந்த ஓவியத்தில் தமிழ்த்தாய் கறுப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது, தலைவிரிகோலமாக இருக்கிறது என்று அந்த ஓவியத்தை ஒரு தரப்பினர் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று புதிதாக ஒரு தமிழ்த்தாயின் ஒவியத்தை பதிவேற்றவே, எது ஒரிஜினல் தமிழணங்கு என்று பாஜக மற்றும் திமுகவினரிடையே சமூகவலைதளங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.