சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா? தொடரும் குழப்பம்

தை மாதம் தமிழ் புத்தாண்டு தொடங்குவது பற்றி நற்றிணை, ஐங்குறுநூறு, தொல்காப்பியம் முதலான நூல்களில் குறிப்புகள் உள்ளதாக, 1921-ம் ஆண்டு தெரிவித்தார் மூத்த தமிழறிஞர் மறைமலையடிகள்.

Karthick S | news18
Updated: April 13, 2019, 9:39 PM IST
சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டா? தொடரும் குழப்பம்
தை மாதம் தமிழ் புத்தாண்டு தொடங்குவது பற்றி நற்றிணை, ஐங்குறுநூறு, தொல்காப்பியம் முதலான நூல்களில் குறிப்புகள் உள்ளதாக, 1921-ம் ஆண்டு தெரிவித்தார் மூத்த தமிழறிஞர் மறைமலையடிகள்.
Karthick S | news18
Updated: April 13, 2019, 9:39 PM IST
தமிழக அரசால், தற்போது அதிகாரப் பூர்வமாக சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், எந்த நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற குழப்பம் நீடித்தே வருகிறது. 

தமிழ் புத்தாண்டு எப்போது கொண்டாடப்பட வேண்டுமென்ற விவாதத்துக்கும், திராவிட அரசியலின் பாரம்பரியம் மற்றும் தமிழ் கலாசார மறுமலர்ச்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.

தை மாதம் தமிழ் புத்தாண்டு தொடங்குவது பற்றி நற்றிணை, ஐங்குறுநூறு, தொல்காப்பியம் முதலான நூல்களில் குறிப்புகள் உள்ளதாக, 1921-ம் ஆண்டு தெரிவித்தார் மூத்த தமிழறிஞர் மறைமலையடிகள். சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு கொண்டாடுபவர்களை, தனது பாடலொன்றில் கீழ்க்கண்டவாறு விமர்சனம் செய்துள்ளார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

”நித்திரையில் இருக்கும் தமிழா,

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு”  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், கடந்த அரை நூற்றாண்டு காலமாக சித்திரை 1-ம் தேதியையே தமிழ் புத்தாண்டாக, தமிழக மக்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்து அமைப்புகளும் சித்திரை 1-ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று வலியுறுத்திவருகிறார்கள். வேதங்களின் அடிப்படையிலேயே சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக கடைபிடிக்கப்படுகிறது என்பது தமிழ் அறிஞர்களின் வாதமாக இருந்துவருகிறது. தமிழ் அறிஞர்கள், தை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வலியுறுத்திவந்தனர்.

அதனையடுத்து, 2008-ம் தேதி தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது. பின்னர், 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, அந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சித்திரை 1-ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.  அதன்மூலம்,  தமிழக அரசு, சித்திரை 1-ம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
Loading...
இருப்பினும், எந்த நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற குழப்பம் நீடித்துவருகிறது. இரு நாட்களிலும் தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

Also see:

First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...