Home /News /tamil-nadu /

முதல்வரும், துணை முதல்வரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா - திருநாவுக்கரசர் கேள்வி

முதல்வரும், துணை முதல்வரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா - திருநாவுக்கரசர் கேள்வி

திருநாவுக்கரசர் (கோப்புப் படம்)

திருநாவுக்கரசர் (கோப்புப் படம்)

தமிழக முதல்வரும், துணை முதல்வரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா? இருவரும் ஒன்றாக சென்று புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள யார் கேட்டுக்கொண்டது? என்றார் திருநாவுக்கரசர்.

  • News18
  • Last Updated :
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் மறைவையொட்டி நாராயணசாமியை இன்று சந்தித்த திருநாவுக்கரசர் அவருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர், திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களும், அரசின் நிவாரணப் பணிகளும் சரியாக சென்றடையவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக 5,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும்.

    தமிழக முதல்வரும், துணை முதல்வரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா? இருவரும் ஒன்றாக சென்று புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள யார் கேட்டுக்கொண்டது? இவர்கள் புயல் பாதிப்புகளை முழுமையாக  பார்வையிடவில்லை. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விரைவில் வரவுள்ளார்.

    தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். பிரதமர் மோடியை எதிர்ப்பவர்கள், காங்கிரஸ் - திமுக கூட்டணியின் தலைமையை ஏற்பவர்கள் எங்களது கூட்டணிக்கு வரலாம். இதுவரை நட்பு ரீதியில் தான் மதிமுக உள்ளது என்றார் திருநாவுக்கரசர்.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: Congress, Thirunavukkarasar

    அடுத்த செய்தி